புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2014




ருமபுரி இளவரசனின் இளம் உயிர் பறிபோன ஜூலை 4ஆம் தேதியை முன்னிட்டு, அங்கு தோன்றியுள்ள புதிய சூழலானது பதற்றத்தை உண்டாக்கியுள்ளது!

திவ்யா- இளவரசன் சாதிமறுப்புத் திரு மணத்தின் காரணமாக, நத்தம் கிராமத்தில் சாதி யாதிக்க சக்திகளால் 94 தலித் மக்களின் 150 வீடுகள் தாக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தக் காயத்தின் வடு ஆறவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. 

கடந்த 27ஆம் தேதியன்று நத்தம் கிரா மத்தில் புகுந்த போலீஸ் படை ஒன்று, அங்கி ருந்த மூன்று இளை ஞர்களைக் கைது செய்து சென்றது. மறுநாளும் மூன்று பேரைக் கைது செய்திருக்கிறது. மீண்டும் கடந்த 30ஆம் தேதியன்று எம்.பி.ஏ. படித்த திருப்பதி எனும் இளைஞரையும் கைதுசெய்தது. 
ஏன் இந்த திடீர்க் கைதுகள்? மீண்டும் என்ன பிரச்சினை?

இளவரசன் நினைவுநாளன்று பா.ம.க. தலைவர்களைக் கொலைசெய்ய, நக்சலைட்டு களுடன் இணைந்து சதி என்றும் இது பற்றி தனிப்படை அமைத்து விசாரிக்கவேண்டும் என் றும் பா.ம.க. தலைவர் ராமதாசுவும் அறிக்கை வெளியிட, பதற்றம் அதிகமானது.  வி.சி.க. தலை வர் திருமாவளவனோ, “ இளவரசன் நினைவு நாளில் தலித் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற் காகவே, போலீசார் இப்படி கைதுகளில் ஈடு பட்டுள்ளனர்; அவர்களை விடுவிக்கவேண்டும்; 144 தடை உத்தரவையும் வாபஸ் பெறவேண்டும்’’ என்று அறிக்கை விடுத்தார். 


போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, ""மதிகோன்பாளையத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் சதாசிவம் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, நாயக்கன்கொட்டாய் ஆரம்பப் பள்ளி அருகே சங்கர், அதியமான், சந்தோஷ் ஆகியோர் சந்தேகப்படும்படி நின்றி ருந்தனர்; நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இவர் களைக் கைதுசெய்து, மாவட்ட கண்காணிப் பாளர் அஸ்ரா கார்க்கிடம் தெரிவிக்கப்பட்டது. அதை யடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதானவர்களில், 17 வயதான பாலிடெக்னிக் மாணவன் சந்தோஷ் கொடுத்துள்ள வாக்கு மூலம்தான் முக்கியமானது''’’என நிறுத்தியவர் கள், அந்த ‘வாக்குமூலம்’ எனக் கூறிய தகவல்கள் அதிர்ச்சிரகம்.

""இளவரசன் - திவ்யா காதல் கலவரத்திற்குப் பிறகு நத்தம் கிராமத்தில் துடி அமைப்பின் கிளை தொ டங்கப்பட்டது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். 25 இலட்சம் ரூபாய் நிதி திரட்டி, துடியின் கிளைத் தலைவர் சக்தியிடம் கொடுத்தோம். முதல்கட்டமாக நத்தம் காலனியில் 23 குடும்பங்களுக்கு அரசு நிதி ஒதுக்காததால், துடி அமைப்பின் மூலம் தலா ரூ.50ஆயிரம் கொடுத்தோம். கடந்த ஜனவரியில் இழப்பீடு பெறுவதற்காக சென்னைக்குச் செல்லவேண்டி யுள்ளது என மூன்று கிராமங் களையும் சேர்ந்த 50 பேர் தனியார் பேருந்தில் சென் றோம். ஆனால் அரக்கோணத்தில் உள்ள பழைய சினிமா தியேட்டர் அருகே உள்ள ஒரு குடோனுக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அங்கு துடி அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் காளிதாஸ், சந்திரா, மைக்கேல்ராஜ், பாரதிபிரபு, மதன்ராஜ் ஆகியோர், நமது சமூகத்தைக் கேவலப்படுத்தியவர்களைப் பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று பேசினர். அண்ணாநகர், கொண்டம்பட்டி மக்கள் விருப்பம் இல்லாததால் ஒதுங்கிக்கொண்டனர். அடுத்த பயிற்சி வகுப்பு மார்ச், மே மாதங்களில் சென்னையில் நடந் தது. அதில் 20 பேருக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட் டது. மேலும் ஜூலை 4ஆம் தேதிக்குள் பா.ம.க.வின் பகுதி நிர்வாகிகள் மதியழகன், டைலர் முருகன் உள் பட்ட 10 பேரைக் கொல்லவேண்டுமென உறுதிமொழி எடுக்கப்பட்டது'' என்று அந்த வாக்குமூலத்தில் இருப்ப தாக நம்மிடம் கூறினர், சில போலீஸ் அதிகாரிகள். 

அதன்படி, சக்தி, துரை, அசோக்குமார் ஆகியோரைக் கைதுசெய்த போலீசார், செல்போன், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், சாதிய வன்முறையை ஏற்படுத்தும்வகையில் வெளியிடப்பட்டதாக, ’துடி இயக்கத்தின் நோட்டீசையும் கைப்பற்றினர். துப்பாக்கி, வெடிகுண்டு களை காளிதாஸ் கொடுத்த தாகவும், போலீசிடம் பிடி பட்ட ரூ. 4 இலட்சம் துடி அமைப்பிற்காக சேர்க் கப்பட்ட நிதி என்றும் சக்தி அளித்த வாக்குமூலத் தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கைதுசெய்யப்பட்டவர்களின் வழக்கறிஞரான கபிலன் நம்மிடம், ""நத்தம் கிராமத்திலிருந்து கடந்த 27ஆம் தேதி சாயங்காலம் 3 மணிக்கு  மூன்று பேரை தருமபுரி டவுனுக்கு வர வழைத்து, கைதுசெய்தனர். அன்று இரவே எஸ்.பி. கூப்பிட்டதாகச் சொல்லி, ஊர்க்காரர்கள் 10 பேரை போலீசார் கூட்டிச் சென்றார்கள். அவர்களில் மூன்று பேரைப் பிடித்துவைத்து, கைது செய்தார்கள். வேறு வகையில் கைது செய்ததாக, போலீஸ் கூறுவது தவறு. துரை என்பவரை போலீசார் கூட்டிச் சென்றுதான் கைதுசெய்தனர் என்பதை அவரின் மனைவி செல்லி, 28ஆம் தேதி காலையில் மாவட்ட ஆட்சியருக்கு பேக்ஸ் மூலம் மனுவாகக் கொடுத்திருக்கிறார். பாதிக்கப் பட்ட நத்தம் மக்களுக்கு கல்வி உதவி தொடர்பாக கடந்த ஓராண்டாக பல தொண்டு நிறுவனங்கள் பல உதவிகளைச் செய்துவருகின்றன. துடி அமைப்பு- ஆயுதப்பயிற்சி எனக் கூறப்படுவது பற்றி எதுவும் தெரியாது'' என்றார். 

சர்ச்சைக்குரிய ’துடி’ அமைப்பின் தமிழக ஒருங் கிணைப்பாளர் மதன்ராஜ் என்பவரிடம் பேசினோம். அவர் நம்மிடம், ""எங்கள் பாதை அம்பேத்கர் பாதை. கல்வி வழிகாட்டுதல் மட்டுமே எங்கள் பணி. முன்னாள் கூடுதல் தலைமைச்செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்தி வழிகாட்டு தலின்படி செயல்பட்டு வருகிறோம். பின்தங்கிய நிலையில் இருந்த நத்தம் கிராம மாணவர்களுக்கும் கல்வி வழிகாட்டல் அளித்திருக்கிறோம். அங்கிருந்து 18 பேர் பொறியியல் படிப்பிலும் 2 பேர் வேளாண்மைத் தொழில்கல்வியிலும் 2 பேர் சென்னை லயோலா கல்லூரியிலும் சேரக் காரணமாக இருந்திருக்கிறோம். காஞ்சிபுரம் மாவட்டம் நீர்பெயர் என்ற ஊரில் நடந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில், நத்தம் பகுதி மாணவர்கள், இளைஞர்கள் 120 பேர் பங்கேற்றனர். மற்றபடி, ஆயுதப் பயிற்சி சிந்த னையே எங்களுக்குக் கிடையாது'' என்றார். 

எளிய மக்களிடம் சாதிய வன்மத்தைப் பரப்பும் எந்த சக்தியாக இருந்தாலும், அவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுவானவர்களின் எதிர்பார்ப்பு!

ad

ad