புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2014




சிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு எதிராக கராத்தே வீரர் ஹூசைனி கொடுத்துள்ள கொலை மிரட்டல் புகார் ஆளும் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. "விடுதலைப் புலிகளை ஏவி உன்னை கொலை செய்வேன்' என நடராஜன் மிரட்டியதாக ஹூசைனி சொல்லியிருக்கும் தகவல் புலி ஆதரவாளர் களிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை பெசன்ட் நகரிலுள்ள ஹூசைனியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். நம்மிடம் வெளிப் படையாகப் பேசிய அவர், ""ஓவியம் வரைவது, சிலைகள் வடிவமைப்பது உள்ளிட்ட என் கலைத் திறமையை கேள்விப்பட்டு, 2011-ல் என் வீட்டிற்கு வந்தார் நடராஜன். நான் வரைந்த ஓவியங்களையும் சிலைகளையும் பார்த்து வியந்துபோன அவர், "தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் எனக்கு நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில், இலங்கை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப் பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் ஒன்றை அமைத்து வருகிறோம். அதை நான் மட்டும் செய்யமுடியாது என்பதால்  பழ.நெடுமாறனை முன்னிறுத்தி அதை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். 

அந்த உருவாக்கத்தில் ஏதோ ஒன்று குறைகிற மாதிரியே தோணுது. நீங்கள் அதை பார்வையிட்டு ஏதேனும் புதியதாக வடிவமைக்க முடியுமான்னு பாருங்க. செய்கிறீர்களா?'ன்னு கேட்டார். அதற்கு உடனே ஒப்புக்கொண் டேன். ஒருநாள், முற்றத்தை பார்வையிட்ட பிறகு, "முற்றத்தின் 4 அடி சுவருக்கு மேலே 6 அடிக்கு இரண்டு பக்கமும் ஈழத்தமிழர்களின் அவலங்களை சித்தரிக்கிற ஓவியங்களை பேனர் வடிவத்தில் வடிவமைக்கலாம். அதேபோல முற்றத்தின் முன்பகுதி பரந்து விரிந்திருக்கிறது. ஆனால், அது வெறுமையாகவே இருக்கிறது.  அந்த முன் பகுதியில் பூமியை உடைத்துக் கொண்டு ஒரு கை எழுந்து வருகிற மாதிரி ஒரு சிலையை வைக்கலாம். அந்த சிலை மிகப்பெரிய எழுச்சியை தமிழர்களிடையே தோற்றுவிக்கும்' என்றேன். நடராஜனுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. "அப்படியே ஆகட்டும்' என்ற அவர், "செலவு எவ்வளவு பிடிக்கும்' என கேட்டார். "2 கோடி ரூபாய் தேவைப்படும்' என் றேன். "2 கோடியா?' என கேள்வி எழுப்பியவர், "சிம்பிளா செய்யணும்னா எவ்வளவு செல் வாகும்?' என கேட்க, "என்னுடைய உழைப் பிற்கான வெகுமதி இல்லாமல் பொருட்கள் செலவு, ஆள் கூலி, இட வாடகை என 98 லட்சம் ரூபாய் ஆகும்' என்றேன். 

அதனை ஒப்புக்கொண்ட நடராஜன், "உங்களுக்கான வெகுமதியை வேலை முடிந்ததும் நானே தருவேன். இப்போது வேலையைத் தொடங் குங்கள். எந்த சூழலிலும் இவ்வளவு அமௌண்ட்ங்கிறது நெடுமாறனுக்கு தெரிய வேண்டாம். பணம் தொடர்பாக என்னிடம் பேசுங்கள். மற்றதை நெடுமாறனிடம் பேசுங்கள்' என்று அட்வைஸ் செய்துவிட்டு, அட்வான்ஸாக 20 லட்ச ரூபாயை பணமாகக் கொடுத்தார் நடராஜன்.

அதை வைத்து, பாலவாக்கத் தில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து சிலை மற்றும் ஓவியங்கள் தொடர்பான வேலையைத் தொடங் கினேன். இதற்காக 53 பேர் பணியில் ஈடுபட்டார்கள். 90 நாளில் செய்து முடித்தேன். இதனை நடராஜனிடம் காண்பித்தேன். "ரொம்ப நல்லா வந்திருக்கு. முற்றத்திற்கு சென்று சரிபாருங்கள்' என்றார். அதன்படி, முற்றத்திற்கு சென்று பார்த்தேன். 50 அடி நீளத்துக்கு 5 அடி உயரத்தில் சுற்றுச் சுவர் அமைத்திருந்தார்கள். அதன் மேலே பேனர்கள் 6 அடிக்கு அமைவது பற்றியும் முன்பக்கம் எழுச்சி யுடன் எழும் கை சிலையை அமைப் பது பற்றியும்  ஆராய்ந்தோம். அப் போது நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் அங்கு வந்தார். நாங்கள் ஆய்வு செய்து கொண்டிருந்ததைப் பார்த்து, "முன்பக்கம் பேனரோ, சிலையோ எதுவுமே அமைக்கக்கூடாது' என்று கறாராக சொன்னார். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அமைப்பதற்கு மறுத்துவிட்டார். இதனால் செம அப்செட். இதை நடராஜனிடம் சொன்னேன். "கொஞ்ச நாள் பொறுங்கள்' என்றவர், ஓரிரு நாள் கழித்து "நெடுமாறனை சந்தியுங்கள்' என்றார். நெடுமாறனை சந்தித்தபோது, "முன்பக்கம் வைப்பதால் தமிழ்த்தாய் சிலை மறைக்கிறது. அதனால் கை சிலையை  வேறு ஒரு இடத்தில் அமைக்கலாமா?ன்னு யோசியுங்கள்' என்றார். சரி... என்று சொல்லிவிட்டு முற்றத்திலேயே வேறு ஒரு இடத்தை பார்த்தோம். அது குறித்து நெடுமாறனிடமும் நடராஜனிடமும், "வேறு இடத்தில் வைப்பதாக இருந்தால் ஒரு கை வேணாம், 9 கைகள் பூமியை துளைத்துக்கொண்டு சின்னதும், பெரியதுமாக ஒன்றன்பின் ஒன்றாக எழுவதுபோல அமைக்கலாம். அதில், "விழ விழ எழுவோம், விழ விழ எழுவோம். ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்' என்கிற வாசகத்தை பொறிக்கலாம்' என்றேன். அருமையாக இருக்கிறது என்று பாராட்டிவிட்டு "அப்படியே சிலையை உருவாக்குங்கள்' என்றனர். அதன்படி உருவாக்கிக் கொண்டிருந்தோம். ஃபைபர் மெட்டீரியலில் முடித்து மெட்டலில் வார்க்க வேண்டும். ஃபைபர் வேலை முடிந்த நிலையில், நடராஜனின் நண்பர் இளவழகன் ஃபோன் செய்து "வேலையை அப்படியே நிறுத்துங்கள்' என்றார். காரணம் எதுவும் சொல்லவில்லை. வேலை நின்றது. மீண்டும் எனக்கு அப்செட். பணியில் ஈடுபட்டிருந்த 35 தொழிலாளர்களும் நொந்து போனார்கள். 


ஒருகட்டத்தில், "செய்த சிலையை முற்றத்தில் வையுங்கள்' என்றார் நடராஜன். அதை வைப்பதற்காக முயற்சித்தபோது இளவழகனும் நடராஜனின் மேனேஜர் கார்த்தியும் என்னிடம், "தமிழ்த்தாயை விட உங்கள் சிலை உயரமாக இருக்கிறது. அதனால் இந்த இடத்திலும் வைக்கக்கூடாது. வேறு ஒரு பகுதியில் வையுங்கள்' என்றனர். இதனால் எங்களுக்குள் ஆர்கியுமெண்ட் பலமாக எழுந்தது. இதனால், உருவாக்கப்பட்ட சிலையை அமைக்க முடிய வில்லை. நடராஜனிடம் இது குறித்து சொன்னபோதும் அவரும் ஏனோ அமைதியாகவே இருந்துவிட்டார்.

இந்தச் சூழலில்தான், நடராஜன் உட்பட பல பேரை கட்சியிலிருந்து நீக்கிய முதல்வர் அம்மா, இவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டார்கள். அதனால், அவரது பக்தனான நான், அந்த உத்தரவை ஏற்கும் வகையில் நடராஜனை சந்திக்கவோ, தொடர்புகொள்ளவோ விரும்பாமல் ஒதுங்கிக்கொண்டேன், செய்த சிலைகள் அப்படியே கிடந்தன. சிலைகளை அமைப்பது பற்றி அவர்களும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை''’என்று மூச்சுவிடாமல் நடந்ததை சுட்டிக்காட்டிய ஹூசைனி, சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ""இந்த சிலைகள் உருவாக்கத்துக்கு மட்டும் பேசப்பட்ட மொத்த தொகை 98 லட்ச ரூபாய். முதல் கட்டமாக 20 லட்சமும் பிறகு 5 லட்சமும் என்னிடம் கொடுத்தனர். அடுத்து 50 லட்ச ரூபாயை நடராஜனின் மேனேஜர் கார்த்தி வசமே இருந்தது. தினமும் என்ன என்ன செலவுகளோ அதற்குரிய தொகை மட்டும் கொடுத்து வந்தார். இவை அனைத்திற்கும் பில்  செட்டில் செய்யப்பட்டிருக்கிறது. 

இந்தச் சூழலில் ஒருநாள் இளவழகன், பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி ஆகியோர் என்னிடம் வந்து "எந்தெந்த தேதியில் பணம் வாங்கப்பட்டது. எவ்வளவு வாங்கப்பட்டது பற்றி கடிதம் கொடுங்கள்' என்றனர். நானும், நடராஜன் பெயர் போட்டு, பணம் வாங்கப்பட்ட விபரத்தை எழுதி தந்தேன். உடனே அவர்கள், "நடராஜன் பெயருக்கு கடிதம் தரக்கூடாது. என்னுடைய பெயருக்கு கடிதம் கொடுங்கள். அதுவும் நாங்கள் சொல்ற தேதியை போட்டு எழுதிக்கொடுங்கள்' என வலியுறுத்தினர். அதை ஏற்க மறுத்து, "நடராஜன் தான் என்னிடம் வேலை கொடுத்தார். பணமும் கொடுத்தார். அவருக்குத்தான் கடிதம் தருவேன். மேலும் நீங்கள் சொல்ற தேதியை குறிப்பிட முடியாது. எது உண்மையான தேதியோ அதைத் தான் எழுதுவேன்' என்று கறாராக சொல்ல... இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் தலைவர், "முள்ளிவாய்க்கால் முற்றம் என்கிற பெயரில் கடிதம் கொடுங்கள்' என்றனர். முற்றத்தின் தலைவர் நான்தான்னு நடராஜன் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருப்பதால், அதற்கு சம்மதித்தேன். ஆனால், அவர்கள் குறிப்பிடும் தேதியை எழுத மறுத்ததால் அவர்கள் எழுந்து போய்விட்டனர்.

இப்படியே பல நாட்கள் கழிந்தன. கடந்த 26-ந் தேதி "நடராஜன் கூப்பிடுறார், வீட்டுக்கு வந்து போங்கள்' என்றார் இளவழகன். போவதா? வேண்டாமா?ன்னு ஒரே குழப்பம். எனது நண்பரான வழக்கறிஞர் தடா சந்திரசேகரனிடம் ஒப்பினீயன் கேட்டபோது, "போய்ட்டு வா. பார்த்துக்கலாம்' என்றார். அதன்படி நடராஜனின் வீட்டிற்குச் சென்றேன். அங்கு அவரை நான் சந்திக்க, அந்த அறையில் இளவழகன், கார்த்தி, ஏர்போர்ட் மூர்த்தி ஆகியோர் இருந்தார்கள். நடராஜன் என்னை பார்த்த மாத்திரத்தில், "இளவழகன் பேரில் கடிதம் தந்தால் என்ன? என் பேரில் கொடுத்தால் பிரச்சினை வரும்டா. ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிற' என்று ஆரம்பித்து, அத்தனை கெட்ட வார்த்தையிலும் என்னை திட்டித் தீர்த்தார். "இப்படியெல்லாம் பேசறது சரியில்லை'ன்னு நான் சொல்ல... "என்னடா ம.... சரியில்லே? தொலைச்சிடுவேன். நாங்க சொல்ற மாதிரி எழுதிக்கொடு. இல்லே, விடுதலைப்புலிகளிடம் சொல்லி போட்டுத்தள்ளிடுவேன். என்கிட்டேயே மோதுறியா? நீ, போயஸ்கார்டனில் போய் ஒளிஞ்சிக்கிட் டாலும் அங்கு வந்தே உன்னை உண்டு இல்லைன்னு பண்ண முடியும்டா. கமிஷனர்ட்ட போவியா? போ.... ஜார்ஜை இங்கு வரச்சொல்லவா? டேய், கமிஷனருக்கு ஃபோன் போடுறா... பார்த்துடலாம் இவன' என்று சொல்லிக் கொண்டே என்னை அடிக்கப் பாய்ந்தார் நடராஜன். அவரை எல்லோரும் பிடிக்க, அவர் திமிற, என்னை அவர் எட்டி உதைக்க.... என அங்கு ஒரே களேபரம். ஆனாலும் அவங்க விருப்பத்துக்கு ஒத்துழைக்க மறுத்தேன். 

ஒரு கட்டத்தில் வெளியில போடான்னு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்துதான், நடராஜன் மற்றும் அவரது ஆட்கள் மீது கொலைமிரட்டல் புகார் தருவதற்காக போலீஸ் கமிஷனர் அலுவலகம் போனபோது, தென்சென்னை இணை கமிஷனர் ஆபாஷ்குமாரை பார்க்கச் சொன்  னார்கள். அவரை சந்தித்து, நடந்த அத்தனையையும் விவரித்ததோடு அதனை புகாராகவும் கொடுத்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரம் நடராஜனின் வீட்டில் நான் இருந்திருந்தால் நிச்சயம் என்னை கொன்றிருப்பார்கள். அவர்கள் கொடுத்த பணத்திற்கு சிலைகளை உருவாக்கிவிட்டேன். பேசப்பட்ட தொகையில் இன்னும் 23 லட்ச ரூபாய் பாக்கியிருக்கிறது. அதை கொடுத்தால் வெண்கலத்தில் மோல்டு செய்து சிலைகளை கொடுக்க தயாராகவே இருக்கிறேன்'' என்றார்.

இந்தச் சூழலில், பத்திரிகையாளர்களை சந்தித்த இளவழகன், ""ஹூசைனி சொன்னபடி நடந்துகொள்ளவில்லை. அவர்தான் எங்களை ஏமாற்றிவிட்டார். நடராஜன் அவரை மிரட்டவில்லை. பணமும் வேலையும் கொடுத்தது நான். ஆனால், தேவையில்லாமல் நடராஜன் பெய ரை வம்புக்கு இழுக்கிறார்'' என்கிறார். 

ஹூசைனியின் குற்றச் சாட்டு குறித்து நடராஜனின் கருத்தறிய அவரை தொடர்புகொண்டபோது, அவரது தொடர்பு நமக்கு கிடைக்கவே இல்லை. நேரில் சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோதும் "சார், வெளியே சென்றுவிட்டதாகவே' பதில் சொன்னார்கள். 

ஹூசைனி கொடுத்த புகார் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்தபோது... ""தற்போ தைக்கு ஹூசைனிக்கு "கன் மேன்' பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.  அவர் கொடுத்த புகார் தொடர்பான மேலிட உத்தரவுக்கா

ad

ad