புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2014

அணி திரண்டு சாட்சியம் அளியுங்கள்

"இலங்கையின் இனப்பிரச் சினைத் தீர்வுக்கான முதல் படியாக ஐ.நா. விசா ரணைக் குழு முன்னிலையில் புலம் பெயர் தமிழர்கள் அணிதிரண்டு சாட் சியமளிக்கவேண்டும்.'' 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட அதிகமான தமிழ் மக்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனவே, அவர்களும் ஐ.நா. விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு, நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்றுமுன்தினம் தனது விசாரணைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விசாரணைக்குழு இலங்கை வருவதற்கு அரசு அனுமதி மறுத்திருந்தது. ஆயினும், தமக்கு அனுமதி வழங்கப்படாதுவிடினும் நம்பகமான வழிமுறைகள் ஊடாக இலங்கைக்கு வெளியே இருந்து விசாரணைகள் நடைபெறும் என்று விசாரணைக் குழு அறிவித்திருந்தது.


அணி திரண்டு
இந்நிலையில், முதல்கட்டமாக புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் தனது விசாரணைகளை ஐ.நா. விசாரணைக்குழு ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஐ.நா. விசாரணைக்குழு தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. இதன் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஐ.நா. விசாரணைக்குழு அமர்வுகளை நடத்தி சாட்சியங்களைப் பதியவுள்ளது. இதனை நாம் வரவேற்கி
ன்றோம்.

எனவே, இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முதற்படியாக ஐ.நா. விசாரணைக்குழு முன்னிலையில் புலம்பெயர் தமிழர்கள் அணிதிரண்டு சாட்சியமளிக்க வேண்டும்.

அதேவேளை, இலங்கை மீது ஐ.நா. விசாரணையைக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்குப் புலம்பெயர் தமிழர்கள் முழு மூச்சாகச் செயற்பட்டார்கள் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட அதிகமான தமிழ் மக்கள் ஆஸ்திரேலியா சென்று அங்கு தஞ்சமடைந்துள்ளனர். எனவே, அவர்களும் ஐ.நா. விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேவேளை, ஐ.நா. விசாரணைக்குழு இலங்கை வர அரசு அனுமதி மறுத்துள்ளபோதிலும் இங்குள்ள தமிழ் மக்கள் ஏதோவொரு வழியூடாகத் தமது சாட்சியங்களை விசாரணைக்குழுவுக்கு வழங்குவார்கள்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad