புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2014

வடக்கு ஆளுநரை மாற்றும் விடயத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் அழுத்தம்

வட மாகாண ஆளுநர் யார் என்­பதை தீர்­மா­னிக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கே உள்­ளது. இதில் யாரு­டைய பரிந்­து­ரை­களும் அர­சாங்­கத்­திற்கு அவ­சி­ய­மில்லை என தெரி­விக்கும் அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க வடக்கின் ஆளுநர் யார் என்­பதை தெரிவு செய்ய சி.வி. விக்கி­னேஸ்­வரன் யார் எனவும் கேள்வி எழுப்­பினார். 
வட மாகாண ஆளு­ந­ராக மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்­தி­ர­சிறி மீண்டும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் வட மாகாண முதல்வர் மற்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­தி­ருக்கும் நிலை­மையில் அது தொடர்பில் அர­சாங்க பங்­காளிக் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­ம­ய­விடம் வின­விய போதே அக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான பாட்­டலி சம் 
பிக்க ரண­வக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

தொடர்ந்தும் அவர் குறிப்­பி­டு­கையில்; 

இலங்­கையின் அர­சியல் யாப்­பின்­படி ஆளுநரின் நிய­ம­னத்தை செய்­வது இந்த நாட்டின் ஜனா­தி­ப­தியே இதில் எவ­ரி­னது தனிப்­பட்ட தலை­யீடும் ஏற்­ப­டுத்த முடி­யாது. இத வட­மா­கா­ணத்­திற்கு மட்­டு­மல்ல இலங்­கையில் உள்ள அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் பொருந்தும். தற்­போது வட மாகா­ணத்­திற்­கான ஆளுநர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இதில் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்­தி­ர­சிறி மீண்டும் நியமிக்­கப்­பட்­டி­ருப்­பது ஜனா­தி­ப­தியின் தெரி­வாகும். இதை எவரும் எதிர்க்­கவோ குற்றம் சுமத்­தவோ உரிமை இல்லை. 

வடக்­கிற்கு கூட்­ட­மைப்பு சார்பில் ஒரு­வரை நிய­மித்து வடக்கை தமது கட்­டுப்­பாட்­டினுள் வைத்­தி­ருக்­கலாம் என்ற முயற்­சியில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு முயற்­சிக்­கின்­றது. இதில் சர்­வ­தேச புலம்­பெயர் அமைப்­பு­களின் அழுத்­தமும் உள்­ளது. இலங்கையில் எவ்­வா­றா­ன­தொரு ஆட்சி அமைய வேண்டும் என சர்­வ­தேசம் தீர்­மா­னிக்க முடி­யாது. ஆனால் சர்­வ­தே­சத்­திற்கு ஏற்ற வகையில் இலங்­கையில் ஆட்சி அமைய வேண்டும் என பலர் முயற்­சிக்­கின்­றனர். 

குறிப்­பாக வடக்கில் மீண்டும் பழைய நிலை­மை­களை ஏற்­ப­டுத்தி மீளவும் நாட்டை பிளவுபடுத்தும் முயற்­சி­யி­லேயே வடக்கின் முதல்வர் மற்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பினர் முயற்சிக்கின்றனர். அதற்கு இடம் கொடுத்து அவர்­களின் ஆணையைநிறைவு செய்ய அர­சாங்கம் ஒருபோதும் இட­ம­ளிக்­காது. 

வடக்கில் ஆளு­ந­ராக யாரை நிய­மிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்போ வட மாகாண முதல்வர் சி. வி. விக்­னேஸ்வ­ரனோ தீர்­மா­னிக்க முடி­யாது. வட மாகாண சபை வடக்கு மக்­களின் ஆத­ர­வுடன் செயற்­ப­ட­வில்லை. வடக்கு மக்­களின் தேவை­களும் கோரிக்­கை­களும் வேறு. ஆனால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­களும் வட மாகாண சபையின் செயற்பா­டு­களும் வேறு வித­மா­னது. நாட்டை பிரித்து வட மாகா­ணத்தை தனி நாடாக்கும் முயற்சி­யி­லேயே தமிழ்த் தலை­வர்கள் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை ஒன்று இருந்­தது. அதை முறி­ய­டித்து இன்று ஒற்­று­மை­யினை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். 

இப்­போது இலங்கை விட­யத்தில் சர்­வ­தே­சத்தை நுழை­ய­விட்டு தீர்வுகாண நினைப்­பது ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒன்றாகும். 

எனவே, வட மாகாண ஆளுநர் தெரிவு விடயத்தில் அர­சாங்­கத்தின் முடிவு மிகச்சரி­யா­னது எனவும் அவர் தெரி­வித்தார்.

ad

ad