புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2014

இலங்கை வானொலி யில் சிரேஷ்ட அறிவி ப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் நேற்று காலமானார்.

சிலாபம் மருதங்குளத்தை பிறப்பி டமாகக் கொண்ட ராஜகுரு

சேனாதிபதி கனகரட்ணம் 1960 முதல் மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலியில் பணியாற்றி வந்தார். இறுதிவரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த இவர் தனது 80 ஆவது வயதில் காலமானார். மருதங்குளத்தில் பிறந்த இவரது அப்பாவின் பெயர் முத்தையா, அம்மா பொன்னம்மாள். அப்பா ராஜவம்சத்தை சேர்ந்தவர். தமிழ் நாட்டில் இருக்கும் அயோத்தியிலிருந்து வந்தவர். கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் பெற்றவர். ராஜகுரு சேனாதிபதி என்பது குடும்பத்தின் பரம்பரை பெயராக கொண்டிருந்தவர்.

தமிழில் மிகவும் பாண்டித்தியம் பெற்றிருந்த இவர் தூய தமிழை இலங்கை வானொலியினூடாக வழங்கிய பெரு மைக்குரியவர். இலங்கை வானொலியில் இவர் நடத்திய பொதிகைத் தென்றல் எனும் நிகழ்ச்சி இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் பிரபலம் பெற்றிருந்தது.

தமிழில் ஆர்வமிகுதியால் இவர் நடத்திய ‘நல்லதமிழ் கேட்போம்’ எனும் நிகழ்ச்சி மூலம் தமிழக நேயர்களையும் தன் வசப்படுத்திய பெருமைக்குரியவர் இராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம்.

நேற்றுக் காலை சிலாபம் ஆஸ்பத்திரியில் காலமான அன்னாரின் பூதவுடல் மாதம்பை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்

ad

ad