புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2014



சொத்துக்குவிப்பு வழக்கில்
இளவரசி, சுதாகரன் தரப்பில் இறுதிவாதம்
 


வருமானத்திற்கு பொருந்தாதவகையில் சொத்துக்குவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோர் மீதான வழக்கு பெங்களூரு, சிறப்புநீதிமன்றத்தில் புதன்கிழமை நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா முன்பு விசாரணைக்கு வந்தது.

சசிகலா தரப்பிலான இறுதிவாதம் தாமதமடைந்த நிலையில், இந்தவழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள இளவரசி, சுதாகரன் தரப்பில் ஆஜரான மும்பை வழக்குரைஞர் அமித்தேசாய், தனது இறுதிவாதத்தை புதன்கிழமை தாக்கல் செய்தார். அமித்தேசாய் தனது வாதத்தின்போது கூறியது: லஞ்சத்தடுப்பு சட்டத்தின்கீழ் இந்தவழக்கு பதிவுசெய்யப்பட்டது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது வரை எதுவும் முறையாக நடைபெறவில்லை.
அரசியல் நெருக்கடி காரணமாக அனைத்துப்பணிகளும் அவசர  கோலத்தில் நடந்தன. இந்தவழக்கின் அடிப்படையே தவறானது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பினாமியாக இளவரசியும், சுதாகரனும் செயல்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும், சாட்சியங்களும் இல்லை.
ஜெயலலிதாவுக்கும் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் எவ்வித ரத்த சம்பந்தமோ, தொழில் சம்பந்தமோ கிடையாது. ஜெயலலிதாவும், இளவரசி மற்றும் சுதாகரனும் நண்பர்கள் அவ்வளவுதான். இளவரசியும், சுதாகரனும் பங்குவகிக்கும் நிறுவனங்கள் ஏற்கெனவே மூலதனங்களை முறையாக திரட்டி, திறம்பட நடத்தப்பட்டுவந்தன என்று அவர் வாதிட்டார். வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக் கப்பட்டது.
வியாழக்கிழமை தனது வாதத்தை முடிக்க முயற்சிப்பதாக அமித் தேசாய்தெரிவித்தார். இவரைதொடர்ந்து, சசிகலா தரப்பிலான இறுதிவாதத்தை அவரின் வழக்குரைஞர் மணிசங்கர், வெள்ளி அல்லது சனிக்கிழமை தொடங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ad

ad