புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2014


புலிகளின் தகவல்களை அறியப் பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகள் மூலம் அரசியல்வாதிகளின் தரவுகள் 
யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் பற்றி தகவல்களை சேகரிக்க பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட
தகவல்களை அறிய அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த தொழில்நுட்ப கருவிகள் அரசியல் நோக்கங்களுக்காகவும் பொருளாதார நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றை பயன்படுத்தி அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதுடன் கணனிகளின் தரவுகளும் பெறப்படுகின்றன.
பண்பற்ற இந்த நடவடிக்கை காரணமாக அரசியல்வாதிகள் தொடர்பாடல்களுக்காக மாற்று தொழிற்நுட்பங்களை பயன்படுத்தத வேண்டியுள்ளது.
இதற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில பகுதிகள் பல வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதே அதற்கு காரணம்.
பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை கண்டறியவே ஒட்டு கேட்கும் தொழிற்நுட்பம் கண்டறியப்பட்டது.
எனினும் தற்போது இந்த தொழிற்நுட்பம் பண்பற்ற வகையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தகவல்களை அறிய பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ad

ad