28 ஜூலை, 2014


யாழில் வெள்ளைவான் கொள்ளைக் கும்பல் கைது- பெண் இராணுவ அதிகாரி கைது

யாழ்ப்பாணத்தில் வெள்ளை வான்களில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவினர் என்ற போர்வையில் குறித்த கொள்ளைக் கும்பல், வீடுகளில் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மானிப்பாய், அச்சுவேலி, ஊர்காவற்துறை, கோப்பாய், சுன்னாகம் போன்ற பிரதேசங்களில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் இரகசிய பொலிஸார் எனத் தெரிவித்து வீடுகளுக்குள் புகுந்து, குறித்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தும் போர்வையில் குறித்த கொள்ளையர்கள் பொதுமக்களிடம் கொள்ளையிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து தங்கம், டிஜிட்டல் கமரா, கைத்தொலைபேசிகள், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 10ம் திகதி வரையில் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.