புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2014

இன அழிப்பிற்கு நீதி கேட்டு பல்லாயிரம் தமிழர்கள் ஐ.நா முன்றலில் உரிமை முழக்கம்/மகிந்த சுப்பிரமணியம் சுவாமி கொடும்பாவிகள் எரிப்பு

தமிழர் தாயகத்தில்  இலங்கை அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்து கலந்து கொண்டு உரிமை முழக்கமிட்டனர்.
ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இன்று திங்கட்கிழமை 2.30 மணியளவில் இவ்வுரிமை முழக்கம் எழுச்சியுடன் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளின் 27வது கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் இப் புரட்சிகர நிகழ்வு முக்கியம் பெறுகின்றது.
இதில் பல மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல தமிழ் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், தியாக தீபம் திலீபன் மற்றும் போராளிகள், பொது மக்கள், ஈகைப் பேரொளிகளுக்கு சுடரேற்றலும், அகவணக்கமும் இடம்பெற்றது.
இப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வண்ணம் துவிச்சக்கர வண்டிப் பயணம் மேற்கொண்ட மூன்று தமிழ் இன உணர்வாளர்களும் முருகதாசன் திடலை அடைந்துள்ளனர்.
அத்துடன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் சுப்பிரமணிய சுவாமியின் கொடும்பாவிகளும் ஊர்வலத்தில் இழுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த கொடும்பாவிகள் எரிக்கப்பட அனுமதிக்கபடாத போதும்  இளையோர் பலவந்தமாக நான்கு இடங்களில் கொளுத்தி முழக்கமிட்டனர .தீயணைப்பு படையினரும் காவல்துறையினரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
இப்போராட்ட நிகழ்வில் பொலிசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad