புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2014

ஈ பி டி பி இரண்டாகப் பிளவு படும் ஆபத்து .முஸ்லிம் காங்கிரசிலும்  பிளவு மகிந்தாவின் தந்திரம் 
ஈ.பி.டிபி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் பாரிய குழ்ப்பத்தில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

டக்ளசிடம் உள்ள கவலை இந்த அரசை விட முன்னய அரசுகளில் எல்லாம் எவ்வளவு மதிப்புடன் இருந்தோம். ஆனால் எம்மை இன்றை ஜனாதிபதி மதித்தாலும் அவரது குடும்பம் ஒரு கனமும் பார்ப்பதில்லை, பாதுகாப்பு அமைச்சின் செயலர் சரிவர கதைப்பதும் இல்லை, அதனால் எதற்கு இவர்களை ஆதரிப்பது எம்மை நன்றாக பாதுகாத்த முன்னால் ஜனாதிபதியிடம் சென்றால் ஓரளவு மதிப்பார் என்ற மனநிலை அவருடையது.
சந்திரகுமார் முற்றிலும் எதிர் மாறாக இன்றைய ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டும் என்ற விடாப் பிடியுடன் மற்றைய எம்.பி சில்வஸ்திரி எது நடந்தாலும் சரி எனும் மனநிலையில் இருப்பதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளதுடன்,
ஈ.பி.டி.பி கட்சியை உடைக்க வேண்டும் என்பதில் கோத்தாபாய குறியாக இருப்பதாகவும் அதற்கு சந்திரகுமார் ஒரு கருவியாக பயன் படுத்தப் படுகிறார்.  என்கிறது ஈபிடிபி கட்சி வட்டாரங்கள்.
பிரிந்து நிற்பவர்களை இணைக்கும் முயற்சியில் நாமலின் உதவியை வடமாகாண எதிர் கட்சித் தலைவர் தவராசா நாடியிருக்கின்றமை குறிப்பிடத் தக்கது.
இன்றை அரசில் உள்ள கட்சிகள் எல்லாம் முடிவுகளை அறிவித்துள்ள நிலையில் ஈபிடிபி கட்சி மட்டும் தாமதிப்பது மேற்குறிப்பிட்டவைக்கு தகுந்த ஆதாரம் எனக் குறிப்பிட்டுள்ள எமது செய்தியாளர் முன்னால் ஜனாதிபதியை டக்ளஸ் தேவானந்தா சந்தித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad