புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2014



தொண்டமானும், திகாம்பரமும் ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு
மலையகத்தின் பிரதான கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தேசிய மொழிகள் பிரதி அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் இவ்வாறு அறிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனைத் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இரண்டு கட்சிகளும் நிபந்தனைகள் கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கப் போவதில்லை என குறிப்பிடப்படுகிறது.
எனினும், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளதாக இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, மலையக சிறுபான்மை கட்சிகளின் ஆதரவினை பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad