புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2014

புங்குடுதீவின் இரண்டு சட்ட அறிவாளிகள் கே  வி தவராசா,வி .ரி .தமிழ்மாறன் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் 
இன்றுவரை ஒரு தமிழர் உட்பட பதினாறுக்கும் அதிகமான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது .இம்முறையும்
சிங்கள அரசியல் வாதிகளின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி தமிழர்களின் அரசியல் உரிமைக்கான குரல்களை வீணாக்காது இந்த ஜனாதிபதி தேர்தலை உள்நாட்டிலும் உலக அரங்கிலும் தமிழரின் அரசியல் உரிமைக்குரலுக்கான கருத்துக்கணிப்பாக பிரகடனப்படுத்தி தமிழ் தலைமைகள் செயல்பட வேண்டுமென்ற கருத்து பல்வேறுமட்டங்களில் மேலோன்கிவருகின்றது .
இரு பிரதான வேட்பாளர்களும் சிங்கள பெரும் பன்மை கருத்தியலுக்கு வலுச் சேர்ப்பவர்களாக உள்ளனர் ,சிங்கள மேலாதிக்க சிந்தனையும் தமிழர்களை அளித்து வெற்றிகொண்ட மமதையிலும் தங்களை வெற்றியாளர் என சிங்கள மக்களை நோக்கியே வாக்கு கேட்கின்றனர்.தமிழ்த்தரப்பு இருவரில் யாருக்கு ஆதரவளிக்கின்றதோ அதன் எதிர்தரப்பு லாபம் அடையும் இதனால் இருதரப்பினரும் .
தமிழர் தரப்பை வேண்டா விருந்தாளியாகவே பார்க்கின்றனர் இதனால் அரசியல் பேரம்பேசும் சக்தி அற்ற நிலையில் தமிழர் தரப்பு உள்ளது என்பது தெளிவாகின்றது எனவே இந்நிலையை சாதகமாக்கி ஒரு மூன்றாம் தரப்பாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதே சரியான தந்திரமாகும் என்றும் இதனால் தமிழர்கள் இந்தநாட்டில் சம பிரஜைகளாக நடத்தப்படவில்லை என்பதனையும் வெளிப்படுத்தி இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முறைமையில் உள்ள இரண்டாம் தெரிவு எது என்பதை பேரம் பேசல் ஊடாக வெளிப்படுத்டலாம் என்றும் கருத்துக்கள் வெளிப்படுகின்றன.
இந்நிலையில் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவரை தேர்தல் களத்தில் இறக்கி தேத்தல் விஞ்ஞபனத்தில் தமிழர்களது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தி செயல்படுவதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன .
எதிர்வரும் எட்டாம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது வேட்பாளர் யார்? சுயேட்சையா? கட்சியாகவா? அப்படியானால் எந்தக்கட்சி? போன்ற விடையங்கள் ஆராயப்படுகின்றன தமிழர் தரப்பு கட்சிகளுக்கு பஞ்சமில்லை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் பலரது பெயர்களில் ஒன்றுக்கு மேற்பட்டகட்சிகள் தேர்தல் திணைக்களத்தில் பதியப்பட்டுள்ளன.
இதில் ஏதாவது ஒருகட்சியில் போட்டியிடமுடியும் அல்லது கூட்டமைப்புக்கு வெளியிலும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் உள்ளது என்றும் கருத்து முன்வைக்கப்படுகின்றது. அத்துடன் விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணியும் பதிவில் உள்ளது அதனையும் சட்டரீதியாக புனரமைக்க முடியுமா? என்றும் ஆராயப்படுவதாக தகவல் உள்ளது.
அவ்வாறு அக்கட்சியில் போட்டியிட துணிந்து முன்வரக்கூடிய வேட்பாளர்களாக சிலரது பெயர்கள் முன்மொழியப் பட்டுள்ளது இந்நிலையில் எதிர்வரும் பாராளமன்ற தேர்தலுக்கு தம்மை விளம்பரம் செய்வதற்கு சில மேதாவிகள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்த விளைவதாகவும் அறியமுடிகின்றது .இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதை தமிழர் கூட்டமைப்புத் தலைமைகளும் மறைமுகமாக ஆதரிப்பதாகவும் புலம் பெயர் மற்றும் தமிழக அரசியல் ஆர்வலர்களும் ஆதரிப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த சக்திகள் வாக்களிப்பு தினத்துக்கு முதல் நாள் தமது ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகின்றது . இவ்வாறான கருத்தாடல்களுக்கு மத்தியில் வேட்பாளர் தெரிவில் பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன .சிலரது விபறாக்கள் இதோ ஒருவர் தலைநகரத்தில் தலைசிறந்த சட்டத்தத்ரணி இவர் சட்டத்தரணிகளுக்கே சட்டப்பிரச்சனை வந்தபோது அவர்களுக்காக வாதாடியவர் என்றபெயர் உண்டு ஜனாதிபதி வெட்பாளராகினால் அடுத்த பாரளமன்ற தேர்தலுக்கு தமிழ் தேசியவாதியாக போட்டியிடுவார் என்பதுமட்டும் அதற்கு அவருடைய விடமுண்டகண்டன் அருள் கிடைக்க வேண்டும் .
அடுத்தவர் எழுத்துப்போராளி என்று பெயரெடுத்தவர் அன்றுமுதல் எல்லத்தரப்புடனும் உண்டுமகிழ்ந்தவர் எல்லோரும் அவரை எதிரியாக பார்க்கும்போது அவர்மட்டும் அனைவருடனும் சமரசம் செய்து சமபந்தி போசிப்பது என்ற வித்தை தெரிந்தவித்தன் இந்த தேர்தல் இவருக்கு அடுத்த தேர்தலுக்கான அச்சாரம் .
அடுத்தவர் ஒரு சட்ட பேராசிரியர் இலங்கையில் உள்ள சட்ட அறிஞ்சர்களில் ஒருவர் தமிழ் தேசியத்தைவிட்டு மாறாத மாறன் இவர் .
அடுத்தவர் பரம்பரை அரசியல் வாதி சகல வசதிகளும் கொண்டவர் கொண்ட கொள்கை மாரிடாதவர் என்று பெயர் எடுத்தவர். இவருக்கு சொந்தமாக கட்சி இருந்தாலும் தேசிய அடையாள கட்சியில் போட்டியிட விரும்புகிறார் .அடுத்தவர் இளம் தலைவர் என்று அறிமுகம் கொண்டவர் ,இவரையும் தேசியத்தின் அடையாள கட்சியில் நிறுத்த சிலர் முயல்கின்றனர் ,இவர் வேட்புமனு தாக்கல் செய்தால் ஜனாதிபதியாக வராவிட்டாலும் இவருக்கு வாழ்த்துக்கள் மட்டும் உண்டு கரணம் வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் இவரது பிறந்தநாள் .
அடுத்தவர் அஞ்சாத சிங்கம் அதிரடி வித்துவான் இவர் ஒரு சகலதுறை ஆட்டக்காரர் மகிந்த ஆனலென்ன மைத்திரி ஆனாலென்ன இவர் தனிக்கட்டு சிங்கம் இவரது அடுத்த இலக்கு இலங்கையில் அதிக தேர்தலில் போட்டியிட்ட உலகசாதனை செய்வது .எனவே இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் அம்பலமாகும் .

ad

ad