புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2014

தோல்விக்கு துவளாத வைர நெஞ்சம் கொண்டவர்கள் தீவக மக்கள்: .சிறீதரன் பா.உ .
தோல்வியைக் கண்டு சோர்ந்து போகாமல், தம் வாழ்வியலைக் கண்டு சோகம் கொள்ளாமல், தம்மினம் சார்ந்த சிந்தனைகளை மட்டுமே மனதளவில் தழுவிக் கொண்டு வாழ்கின்ற தீவக மக்கள் என்றுமே தம் இனம் சார்ந்த விடுதலைக்காக சிந்திப்பார்களே தவிர, தம்மினத்தை விற்று வாழும் குல துரோகிகளின் பக்கம் சாய மாட்டார்கள் என சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை புளியங்கூடல் மக்களுடனான சந்திப்பு புளியங்கூடல் சனசமூக நிலையத்தலைவர் பூ.சிறீதரன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கிராம மக்களுக்கு பசுமைத்தேசம் திட்டத்தின் கீழ் விதை தானியங்களையும் வழங்கி வைத்ததோடு மக்களின் வாழ்வியல் தொடர்பான பிரச்சனைகளையும் கேட்டறிந்து பதிலுரைத்தார்.
போரின் வடுக்கள் மாறாத தோற்றத்தை தாங்கி நிற்கும் தீவக மண்ணின் நிலமைகளைப் பார்க்கும் போது மிகவும் துன்பமாக இருக்கிறது.
தீவக உறவுகள் உலகெலாம் பரவி தம் மண்சார்ந்த பெருமைகளை காத்து புகழின் எல்லையை அடைந்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள நிலைமைகள் மிகவும் துன்பத்தை தருவதாக இருக்கிறது.
அடிப்படை வசதிகள் எதுவுமே அற்ற நிலையிலேயே எதனையும் சுயமாக சிந்தித்து செயலாற்ற முடியாதவர்களாக இம்மண்ணுக்குரிய சுதேசிகளான தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இத்தனை அவலங்கள், துன்பங்களுக்கு காரணமாக இருப்பவர் தர்ம தேவதையால் தண்டிக்கப்படுவர்.இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் சிறீதரன் எம்.பி மேலும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் புளியங்கூடல் சனசமூக நிலையத்தலைவர் திருவருள், கமக்கார அமைப்பின் தலைவர் ஜெகன் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ad

ad