புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2014

 இயக்குனர் பாலசந்தர் உடல் தகனம்; இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இயக்குனர் கே.பாலசந்தரின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் நேற்று மாலை காலமானார். அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பாலசந்தரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் திரைப்படத் துறையினரும் இரங்கல் தெரிவித்தனர்.
இறுதி ஊர்வலம் 
மறைந்த இயக்குனர் பாலசந்தர் இறுதி ஊர்வலம் அவரின் இல்லத்திலிருந்து இன்று மதியம் 2.45 மணி அளவில் தொடங்கியது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான திரை உலகத்தினர்  கலந்துகொண்டனர்.
பாலசந்தரின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்த அவரது உடல், மாலை 5.30 மணி அளவில் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அவரது உறவினர்கள் கலந்துகொண்டனர்.

 இயக்குனர் பாலசந்தரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று (புதன்கிழமை) ரத்து செய்யப்பட்டன.

அஞ்சலி
முன்னதாக கே.பாலசந்தரின் மறைவைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் அவர் கூறுகையில், ''இயக்குநர் கே.பாலச்சந்தரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
கே.பி.யை இழந்ததால் என்னையே நான் இழந்ததாக வருந்துகிறேன். கே.பாலச்சந்தர் என்னை ஒரு நடிகராக பார்த்ததைவிட மகனாகவே பார்த்தார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.
மேலும் கவிஞர் வைரமுத்து, ஏ.வி.எம். சரவணன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் சரத்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், சாருஹாசன், ரவி ராகவேந்திரா, நடிகைகள் ஸ்ரீப்ரியா குஷ்பு, மனோரமா, ராதிகா, நடிகர்கள் விஜய், அர்ஜூன், மோகன்,பிரதாப் போத்தன், விவேக், இயக்குனர்கள் பி.வாசு, மவுலி, கே.எஸ். ரவிக்குமார், ஹரி, எஸ்.ஜே. சூர்யா, எஸ். பி. சரண், எஸ்.ஏ. சந்திர சேகர், மனோபாலா,
பத்திரிகையாளர்கள் சோ, மதன், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், எம்ஜிஆர் முன்னேற்றக் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்,  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,  உள்பட திரையுலகினர் ஏராளமானோர் இயக்குனர் கே.பாலச்சந்தரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ad

ad