புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2014

கூட்டத்தில் பொதுமக்கள் கூச்சல் பாதியில் உரையை நிறுத்திய மகிந்த
தம்புள்ளையில் ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்ட த்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டி ருந்ததால், ஆத்திரத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு கீழ் இறங்கிச் சென்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில்,
தம்புள்ளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் பங்கேற்றிருந்த பொது மக்கள் தொடர்ச்சியாக கூச்சல் குழப்பம் விளை வித்துக் கொண்டிருந்தனர்.

இதனால், மகிந்த ராஜபக்ஷ கோபமடைந்து பலமுறை கூட்டத்தினரை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதையடுத்து அமைதியாவதும் பின்னர் அவர் உரையாற்றத் தொடங்கும் போது கூச்சல் எழுப்புவதுமாக கூட்டத்தினர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் ஜனாதிபதி, கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தால் தான் தொடர்ந்து பேச முடி யாது என்றும் எச்சரித்தார்.

ஆனாலும், கூட்டத்தினர் அடங்காத நிலையில், உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்று விட்டார்.

அதேவேளை, அவ்வாறு பாதியிலேயே உரை நிறுத்தப்படவில்லை என்றும் வேறொரு கூட்டத்தில் உரையாற்ற வேண்டியிருந்ததால் தான், அவசரமாக அவர் வெளியேறிய தாகவும் அரசதரப்பு கூறியுள்ளது.

பெரிய வெங்காயத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்ததற்கு எதிராக சுமார் 500 விவசாயிகள் சில வாரங்களுக்கு முன்னர் அரசா ங்கத்துக்கு எதிராக தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad