13 ஜன., 2015

மேல் மாகாண சபை மைத்திரி பக்கம் கை மாறியது

மேல் மாகாண சபையின் பிரதான அமைச்சர் தயாசிறி ஜயசேகர உட்பட மேல் மாகாண சபையின் அமைச்சரவை மற்றும் முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
மேல் மாகாண சபையில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது பிரதான அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி எடுக்கும் அனைத்து தீர்மானத்திற்கும் கீழ் செயற்படவும் அனைத்து ஆளுகைக்கும் ஆதரவு வழங்கவுள்ளதாக பிரதான அமைச்சர் தெரிவித்துள்ளார்.