புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2015

இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடம் வழங்கப்படும்! வடக்கு முதல்வரிடம் பிரதமர் உறுதி


வடக்கு மாகாணத்தில் இராணுவம் சுவீகரித்த காணிகள் மக்களிடமே வழங்கப்படும். இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைக்க விரைவான நடவடிக்கைளைத் தாம் எடுப்பார் என தம்மை சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உறுதியளித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவரது அலுவலகத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில் பல விடயங்கள் தொடர்பில் தாம் பேசினார் எனத் தெரிவித்த முதலமைச்சர், அவை தொடர்பில் தெரிவித்த விடயங்கள் வருமாறு:
வடக்கு மாகாணத்தில் இராணுவத் தேவைகளுக்காக மக்களின் பெருமளவிலான காணிகள் சுவீகரிக்கப்பட்டன. இவற்றை விடுவிக்குமாறு நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டிருந்தேன்.
ஆனால் காணிகளை விடுவித்தால் எதிர்க்கட்சிகள் இன ரீதியான போலிப் பிரசாரங்களை மேற்கொள்ளும் என அவர் அஞ்சுகிறார்.
எனினும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய அவர் விசேட குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்தக் குழுவில் காணிகளை இழந்த மக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், வடக்கு மாகாண இராணுவத் தளபதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பல தரப்பினரும் இடம்பெறுவர்.
தேர்தல் முடிந்த பின்னர் இந்தக் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் காணிகளை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என என்னிடம் உறுதியளித்தார்.
இதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் பிரதமருடன் பேசினேன் இதற்கு அவர் உடனடியாக அனைத்துக் கைதிகளையும் விடுவிக்க முடியாது இருக்கும் என்றும், 2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் அமுல்படுத்தத் தேவையானவற்றை செய்வேன் எனக் கூறினார்.
இது தவிர வடக்கு மாகாண சபைக்கு இப்போதும் தொடரும் நெருக்கடிகள், இடையூறுகளையும் தவிர்க்கத் தாம் உதவுவார் என்றும் சொன்னார்.
மேலும் வடக்கின் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் முகமாக ஒட்டுசுட்டான், பரந்தனில் கிளிநொச்சியில் தொழிற்சாலைகளை அமைத்துத் தருவார் என்றும், அத்துடன் மாவட்டங்கள் தோறும் தொழில்சார் நிறுவனங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பார் என்றும் ரணில் உறுதியளித்தார் என்றார் முதலமைச்சர்.
2ம் இணைப்பு
வடக்கு மாகாணத்தில் வன்முறைகளுக்கு வித்திட்டு முன்னைய அரசாங்கத்துடன் இணைந்து செல்வாக்குச் செலுத்தியவர்கள் மீண்டும் அதே செல்வாக்கினை வடக்கில் செலுத்த புதிய அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. மாற்றத்தினைநோக்கி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புப் பூர்த்தி செய்யப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பினை முடித்துக் கொண்டு வடக்கிற்கு வருகைதந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்துடன் இணைந்து வடக்கில் வன்முறைக்கு வித்திட்ட சில சக்திகள் செல்வாக்குச் செலுத்தி வந்திருந்தன. குறிப்பாக ஆயுதக்குழுக்களாக இருந்து சிலர் செல்வாக்குச்
செலுத்தியிருந்தனர். இவ்வாறான சக்திகள் இப்போது அமைக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து மீண்டும் செல்வாக்குச் செலுத்துவதை புதிய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
மாற்றத்தினை நோக்கிய அனைத்து மக்களும் வாக்களித்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
வடமாகாண மக்களுடைய உடனடித் தேவைகள் தொடர்பாகவும் முழுமையான விபரங்களை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கமாறும் பிரதமர் தன்னை மேலும் கேட்டுக் கொண்டதாகவும், வடமாகாண
முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad