புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2015

குற்றச் செயல்களின் தடயங்களை அழிக்கும் ராஜபக்ஷவினர்!


மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றச் செயல்கள், கொள்ளைகள், பாதாள உலக வர்த்தகம், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் காணப்படும் சாட்சியங்களை அழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கொழும்பு கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தி பகுதியில் கடந்த 21 ஆம் திகதி கங்கெட்டா என அழைக்கப்படும் நபர் கொலை செய்யப்பட்டதை அடுத்தே இந்த திட்டமிட்ட நடவடிக்கை பற்றிய தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
கங்கெட்டா என்ற இந்த நபர் கொழும்பு அரும்பொருள் காட்சி சாலையில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நபராவார். எனி்னும் அரும்பொருள்காட்சி சாலையில் நடந்த கொள்ளையுடன் ராஜபக்ஷவினருக்கு தொடர்பிருப்பதாக அப்போது பேசப்பட்டது.
இந்த நிலையில், கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் நேரடியாக சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் சம்பந்தமான சாட்சியங்களை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருதுடன் பல நபர்கள் கொல்லப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை பல அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் சம்பந்தமான கோப்புகள், கணனி தரவுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

ad

ad