புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2015

கிழக்கில் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதில்லை: சம்பந்தன் தலைமையில் இன்று தீர்மானம்


கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி த.தே.கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும். அதனை வேறு யாருக்கும் விட்டுக்கொடுப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் விசேட கூட்டம் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வடக்கிழக்கில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
இந்த கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருகின்றன. பல்வேறு தரப்பினருடனும் பல பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனிக்கட்சியாக அதிக ஆசனங்களைக் கொண்டுள்ளது.
நாங்கள் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த நிலையில் முதலமைச்சர் தொடர்பில் பல்வேறு நிலைப்பாடுகளை பல கட்சிகள் கொண்டுள்ளன. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அந்த முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.

ad

ad