புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2015

வீரமணம் அடைந்த கர்னல் ராய் உடல் அடக்கம்! கண்ணீருடன் தந்தை உடலுக்கு சல்யூட் அடித்த மகன்!

இந்திய ராணுவத்தின் 42வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் தளபதியாக இருந்தவர் கர்னல் எம்.என். ராய் (39). தீவிரவாதத்துக்கு எதிரான பல்வேறு ஆபரேஷன்களில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2  தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது, கர்னல் எம்.எம். ராய் வீரமரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ராணுவத்தின் சார்பாக இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 

கர்னல் ராயின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றது. டெல்லி கண்டோன்மண்டிற்கு கொண்டு வரப்பட்ட கர்னல் ராயின் உடலுக்கு உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் கர்னல் ராயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

உயிரிழந்த ராய்க்கு பிரியங்கா என்ற மனைவியும், அல்கா, ரிச்சா என்ற 2 மகள்களும், ஆதித்யா என்ற மகனும் உள்ளனர். கர்னல் ராயின் உடலுக்கு அவரது மகன், மகள்கள் சல்யூட் அடித்து மரியாதை செய்தனர். அப்போது, கர்னல் ராயின் தந்தை மற்றும் கர்னல் ராயின் மனைவி கதறி அழுதனர். இந்த காட்சி அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. ஆறுதல் கூற தைரியம் இல்லாமல் அனைவரும் தவித்தனர்.

தீவிரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆபரேஷன்களில் கர்னல்எம்.என்.ராய்  பங்கேற்று, எண்ணற்ற வீர சாகசங்களை செய்துள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில், கடந்த திங்களன்று நடைபெற்ற 66வது குடியரசு தின  விழாவில், ‘யுத்த சேவை‘ பதக்கம் வழங்கப்பட்டது. அதற்கு மறுநாளான செவ்வாயன்று, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராய் வீர மரணம்  அடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ராயின் தேசப்பற்றையும் பறைசாற்றுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்னல் எம்.என். ராய் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

ad

ad