புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2015

130 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி செல்கிறார் நிதிஷ் குமார்



பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மான்ஜியை பதவியை விட்டு இறக்கியே தீர வேண்டும் என சபதமேற்றுள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் 130 எம்.எல்.ஏ.க்களுடன் புதுடெல்லி புறப்பட்டார்.

நேற்று பீகார் கவர்னர் கேசரி நாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ் குமார் என்னுடன் வந்த எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 130 பேர் ராஜ்பவனுக்கு வெளியே நிற்கிறார்கள். அவர்களை உள்ளே வரவழைத்து அணிவகுப்பு காட்டட்டுமா? என கவர்னரை கேட்டார். அதற்கான அவசியம் இல்லை என்று தெரிவித்த கவர்னர் இன்று மாலை வரை ஆட்சியமைக்கும்படி தன்னை அழைக்காததை அறிந்த நிதிஷ் குமார் கவர்னரின் போக்கினால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இ.கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 130 பேரையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் நிறுத்தி நம்பிக்கை அணிவகுப்பு நடத்தும் நோக்கத்தில் நிதிஷ் குமார் டெல்லிக்கு புறப்பட்டு செல்வதாக

ad

ad