புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 பிப்., 2015

பிரணாப் மகள், முதல்வர் வேட்பாளர் உட்பட 63 பேர் டெபாசிட் இழப்பு - காங்கிரஸ் அதிர்ச்சி




டெல்லியில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 63 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது, அக்கட்சியின் மேலிட தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் 15 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல், வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. முதல் அமைச்சர் வேட்பாளர் அஜய் மக்கான், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மசா முகர்ஜி உள்ளிட்டோர் டெபாசிட் தொகையை பறிகொடுத்தனர். 

கடந்த 2013ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 24.7 சதவிகிதம் வாக்குகள் பெற்றது. இந்த தேர்தலில் 9.7 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற்றது.

ad

ad