புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2015

ஶ்ரீரங்கம் இடைத்தேர்தல்: தரம் தாழ்ந்தது யார்?

விவாதக்களம் பகுதியில், 'ஶ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன?' என்று தலைப்பிட்டு, 'இது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதுபோல் பணம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றியா,  அதிமுக அரசின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியா?
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதா?' என்ற கேள்விகளை வாசகர்கள் முன் வைத்திருந்தோம். விகடன் வாசகர்கள் என்றால் சும்மாவா..? வழக்கம்போல பின்னியெடுத்துவிட்டனர். அவர்களின் கருத்துக் குவியலில் இருந்து... 

காவித் தமிழன்:
 இது பணத்துக்கு, குவாட்டர் பிரியாணிக்குக் கிடைத்த வெற்றி. இப்போது நடக்கும் ஆட்சி பொற்கால ஆட்சி என்றால், படுத்துக்கொண்டே ஜெயிக்க வேண்டியதுதானே? எதுக்கு இத்தனை விலாவாரியான ஏற்பாடுகள், களேபரங்கள்? தெருவுக்கு ஒரு அமைச்சர் என்று பிரித்துக்கொண்டு 5,000 ரூபாய் கொடுத்து கிடைத்த வெற்றி என்பது அவமானமான விஷயம்.
வே.பாண்டி: ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பது என்பது, நடப்பு உறுப்பினர் மரணமடைந்தாலோ அல்லது பதவியை துறந்தாலோ மட்டுமே இதுவரை நடந்துள்ளது. முதன்முறையாக அகில இந்தியா அளவிலேயே இப்போதுதான் திருவரங்கத்தில் நடந்துள்ள இடைத்தேர்தல் சாதனை படைத்துள்ளது. உறுப்பினர் சட்டரீதியாக பதவி பறிக்கப்பட்டு தண்டனையும் பெற்று தண்டத் தொகையும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இப்படி ஒரு தேர்தல் நடந்துள்ளது. இங்கு நடந்த தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களில்  கணிசமானோருக்கு இந்தக் காரணத்தால்தான் இந்தத் தேர்தல் என்று புரிந்துகொண்டார்களா என்பது சந்தேகம்தான்.
ஊடகங்களோ இந்தத் தீர்ப்பால் மக்கள் அவர் மீது அனுதாபம் கொண்டுள்ளனர் என்கின்றன. அப்படியே அனுதாபம் ஏற்பட்டால் ஊடகங்கள் என்ன செய்ய வேண்டும்? மக்களே... இது அனுதாபம் ஏற்படுத்தக்கூடிய செய்தி அல்ல என்பதனை வலியுறுத்த வேண்டாமா? கட்சியின் செல்வாக்கும், மக்களின் அனுதாபமும் இருக்கிறது என்றால் என்ன காரணத்துக்காக அனைத்து அமைச்சர்களும் முகாமிட்டு இவ்வளவு பணத்தினைக் கொட்ட வேண்டும்? ஒரு காலத்தில் காங்கிரஸ் பெயரில் ஒரு கழுதையை நிறுத்தினாலும் அது வெற்றி பெறும் என்று சொன்னார்கள். அது உண்மையாகவும் இருந்தது. அப்படிப்பட்ட காங்கிரஸ் இப்போது என்ன நிலையில் உள்ளது? அதே நிலைமை இவர்களுக்கு ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்?

kumar
: இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது, பணநாயகம்... இதெல்லாம் இருக்கட்டும். அதிமுகவின் செயல்பாடுகள் இந்தத் தொகுதியில் எப்படி இருந்தது என்று ஆராய்ந்து பாருங்கள்.  சில மாதங்களுக்கு முன்னால் வந்த கட்டுரையில் ஸ்ரீரங்கத்தில் நிறைவேற்றப்பட்ட அரசுப்பணிகளை பற்றி புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தது விகடன். அந்தக் கட்டுரைக்கு பின்னூட்டம் போட்ட பலர், தமிழகத்தில் ஸ்ரீரங்கம் மட்டுமே தொகுதியா என்று அப்போதும் குறைபட்டுக்கொண்டனர். பாராட்டத்தக்க வகையில் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக செயல்பட்ட ஜெயா மற்றும் அதிமுகவை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

இன்னொரு கேள்வி... இந்தத் தேர்தலில் திமுக பணம் கொடுக்கவே இல்லையா? அப்புறம் ஏன் பணம் கொடுத்ததை தடுக்க வந்த அதிமுக பிரமுகரை வெட்டினார்கள்? வழக்குப் பதியப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பணம் கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்கினார்கள் என்று சொல்லி ஆளுநர் உரையை புறக்கணித்த ஸ்டாலின், பணம் கொடுத்த திமுகவினரை (இரண்டு பெண்கள் வேறு) கட்சியை விட்டு நீக்கினாரா? அப்புறம் எதனை வைத்து அதிமுகவை மட்டும் குறை சொல்கிறார்கள்?
BALA.S: அடுத்த தேர்தலுக்கு திமுக அறிக்கை:

1. ஒவ்வொரு ஊரும் அந்த ஊரில் இருப்போருக்கே பிரித்துத் தரப்படும்.
2. காலை, மதிய உணவுகளை 1 ரூபாய் விலையில் அளவின்றி வழங்குவோம்.
3. மின்சாரம், தண்ணீர் இலவசம் (தயவு - கெஜ்ரிவால்)
4. சினிமாவுக்கு வரி கிடையாது.
5. டாஸ்மாக் சரக்கு டோர் டெலிவரி செய்யப்படும்.
6. வரி பாக்கிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
7. சிறைக் கைதிகள் அனைவரும் விடுதலை (அதிமுக தவிர)
8. அரசு ஊழியர் சம்பளம் இரண்டு மடங்காக்கப்படும்.
9. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் தினம் 2 மணி நேரம் மட்டுமே.

வெற்றி விழாவுக்கு சிறப்பு விருந்தினர்: கெஜ்ரிவால்.

Nanban: எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதுபோல் பணம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி என்பது ஜனநாயகத்தின் தோல்வி. 40 நாட்களாக, தமிழக மொத்த அமைச்சர்களும், நகராட்சி, மாவட்ட, வார்டு தலைவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் வீதிக்கு வீதி களம் இறங்கி தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து, பணம், உணவு, டாஸ்மாக் சரக்கு, அரசு இயந்திரம், அலுவலர்கள் என கட்டவிழ்த்து விட்டு ஆளுங்கட்சி மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்று அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற்றிருப்பது, வெற்றியே இல்லை. ஜனநாயகப் படுகொலை.

Suchithra Seetharaman: தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத்தேர்தல்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் ஒரு சம்பிரதாயத்திற்காகவே வைக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில் ஆளுங்கட்சிதான் எப்போதும் வெற்றிவாகை சூடும். 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களை களத்தில் இறக்கி, லட்சகணக்கில் ரூபாய் நோட்டுகளை வாரியிறைத்து அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது என்றால், திமுக மற்றும் பாஜகவினர் பாடு பரிதாபம்தான். மூன்று கட்சிகளை மட்டுமே பார்க்கும் நாம், ஆயிரங்களில் ஓட்டு வாங்கியிருக்கும் கட்சிகளைவிட நோட்டா ஓட்டுகள் ஏன் அதிகம் விழுந்திருக்கின்றன என்று சிந்திப்பதில்லை. அதைவிட சென்னையிலிருந்து சென்று தனி மனிதராக நின்ற டிராபிக் ராமசாமி கூட சில ஆயிரங்களில் ஓட்டுகள் வாங்கியிருக்கிறார் என்பதும் ஆச்சர்யம்தான்.


கணபதி:
 பணத்தால் வென்றுவிட்டார்கள் என்று கூப்பாடு போடுபவர்கள் கவனத்திற்கு...
1) அதிக பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்கும் மக்களை பேசும் முன் அவர்களின் நேர்மையை பாருங்கள். கொடுத்தவருக்கே வாக்களிக்கின்றனர்.
2) பணம் வாங்காமல் வாக்களித்தாலும் அந்த. எம்.எல்.ஏ-வால் தொகுதி மக்கள் அடையப்போகும் பலன்.
3) ஆளுங்கட்சியே ஏன் வெற்றி பெறுகிறது என்கிறீர்களே... ஆளுங்கட்சி அல்லாத வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தால் தொகுதி அடையப்போகும் பலன் என்ன? (கூட்டத்தொடர் புறக்கணிப்பு, வெளிநடப்பு, கூச்சல், நீக்கம் என்றுதான் இவர்களின் அவை நடவடிக்கை. அது எக்கட்சியாயினும்)
4) ஊழல் செய்யக்கூடிய அராஜக ரவுடிகள் எல்லாம் அரசியலில் கட்சியாக அமைப்பாக சேர முடியும்போது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், ஊழல் ஒழிய வேண்டும் என்று சொல்லும் உங்களைப் போன்றோர் ஓர் அணியில் திரள்வதில்லை.

Manoharan: இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் என்று நினைத்து அம்மையார் இங்கு மக்கள் நலப் பணிகளைச் செய்யவில்லை. தொகுதியில் வென்ற தினத்தில் இருந்தே தொகுதிக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்யத் தொடங்கியதோடு, அவை சரியாக மக்களை சென்றடைகின்றவவா என்றும் பார்த்துகொண்டார். எந்த வழியிலும் அவரை யாரும் குறை சொல்ல இயலாதவண்ணம் செயல்பட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு சாதாரண நிலையில் போகிறபோக்கில் இந்தத் தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனாலும், தலைமுறை தலைமுறையாக கட்சியின் அடிப்படை உறுப்பினருக்குக்கூட பணத்தை வாரி இறைத்த நிலைதான் வியப்பை அளிக்கிறது. முன்பெல்லாம் கொஞ்சம் முடிவெடுக்க தள்ளாடும் வாக்களர்களுக்கு பணத்தையும் பரிசையும் கொடுத்து சரிகட்டுவர். இன்றைக்கு கட்சியின் உறுப்பினர்களே, அம்மையாரின் தொகுதியிலேயே, அவரின் சேவையை நன்கு அறிந்தும் பணத்தையும் வெகுமதியையும் எதிர்பார்த்து இருக்கிறான் என்றால், தமிழகம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போய்விட்டது என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

ad

ad