புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2015

நயினாதீவு ஸ்ரீகணேஷ கனிஷ்ட மகாவித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு


வடக்கு மாகாண உறுப்பினர்களுக்கு என நிதி ஒதுக்கீட்டின் ஊடாக பா. கஜதீபன்  நயினாதீவு ஸ்ரீகணேஷ கனிஷ்ட மகாவித்தியாலயத்திற்கு 50 ஆயிரம் ரூபாவில்
ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

 
நயினாதீவு ஸ்ரீகணேஷ கனிஷ்ட மகாவித்தியாலயத்தின்  வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி அண்மையில் இடம்பெற்றது. 
 
அதில் பிரதம விருந்தினராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகளை வழங்கி வைத்தார்.
 
 
மேலும் வடமாகாணசபை உறுப்பினரின் நிதியொதுக்கீட்டின் கீழ் ரூபா 50,000 பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களையும் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்தார். 

ad

ad