புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2015

சிவராத்திரி வழிபாட்டில் இலட்சகணக்கான பக்தர்கள்


திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
 
நேற்று இரவு 6 மணிக்கு முதலாம் யாம பூசையில் அஸ்டோத்திர சத கலச அபிடேகம் (108 கலசம்) நடைபெற்றது. 
 
8 மணிக்கு முதலாம் யாமப் பூசை நடைபெற்றது. 9 மணிக்கு இரண்டாம் யாமக் கும்ப பூசையும் ஏகோனத பஞ்சசதக் கலச அபிடேகமும் (49 கலசம்) நடைபெற்றது. 
 
இரவு 10 :30 மணிக்கு இரண்டாம் யாமப் பூசையும், இரவு 11 மணிக்கு மூன்றாம் யாம கும்ப பூசையும் பஞ்சவிம்சத கலச அபிடேகமும் (25 கலசம்), நள்ளிரவு 12:15க்கு மூன்றாம் யாம இலிங்கேற்பவ பூசையும், பின்னிரவு 2 மணிக்கு நான்காம் யாம சப்த சத கலசஅபிடேகம் (17 கலசம்) நடைபெற்றது. 
 
3 மணிக்கு நான்காம் யாம பூசையும் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு அர்த்தயாமப் பூசை, திருக்கதவடைத்தல், திருவனந்தல், காலப்பூசை என்பன நடைபெற்றது.
 
5.30 மணிக்கு வசந்த மண்டப அலங்கார பூசை, சுவாமி திர்தத்திற்கு எழுந்தருளல், பாலாவியில் தீர்த்ம் கொடுத்தல் என்பனவும் நடைபெற்றது. வழிபாடுகளில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் வந்த சிவ பக்தார்கள் ஒன்றுகூடி சிவன் அருள் பெற்றனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=668053879519623713#sthash.AYwRT4RE.dpuf

ad

ad