புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015

இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா


உலகக் கோப்பை போட்டியின் மற்றோர் ஆட்டத்தில் பின்ச்சின் சதத்தால் 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த 11ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்குத் தொடங்கிய 2ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இந்த ஆட்டம் நடைபெற்றது. தொடக்க வீரர் ஆரோன் பின்ச் இந்த உலகக் கோப்பைத் தொடரின் முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 135 ரன்கள் (128 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
பெய்லி 55 ரன்களும், அடுத்துவந்த மேக்ஸ்வெல் 40 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், மிச்செல் மார்ஷ் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது.
டெய்லர் அபாரம்: இதையடுத்து 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே திணறியது. இங்கிலாந்து அணியில் 6ஆவது ஆட்டக்காரராக களமிறங்கிய டெய்லர் மட்டுமே அந்த அணியின் வெற்றிக்காக கடுமையாகப் போராடினார். டெய்லர் 90 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 98 ரன்களுடன் துரதிர்ஷ்டவசமாக நூலிழையில் சதத்தைத் தவறவிட்டார்.

"ஆன்டர்சனுக்கு ரன் அவுட் கொடுத்தது தவறுதான்'
இங்கிலாந்து பேட் செய்தபோது, 42-ஆவது ஓவரில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் ஜேம்ஸ் டெய்லர் எல்டபிள்யூ முறையில் அவுட் என நடுவர் அலீம் தர் விரலை உயர்த்தினார். இதுகுறித்து உடனடியாக "ரிவியூ' செய்தார் டெய்லர். அதில் நாட் அவுட் என்பது உறுதியானது.
இதனிடையே, ஆன்டர்சனை ரன் அவுட்டாக்கினார் மேக்ஸ்வெல். இதை உறுதி செய்த கள நடுவர்கள், ஆன்டர்சன் அவுட் என அறிவித்தனர்.
ஆட்டத்துக்குப் பின், விளையாட்டுக் கட்டுப்பாட்டுக் குழு இது குறித்து ஆய்வு செய்தது.
ஓர் ஆட்டக்காரர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் என நடுவர் அறிவித்தபின், ரன்கள் எடுக்கவோ, ஆட்டமிழக்கச் செய்யவோ என முடியாது என ஐசிசி விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்டர்சனுக்கு அவுட் கொடுத்த விஷயத்தில் தவறு நிகழ்ந்துவிட்டது என ஐசிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

14-ஆவது ஆட்டக்காரர்

உலகக் கோப்பை போட்டியில் தனது முதல் ஆட்டத்திலேயே சதம் விளாசிய 14-ஆவது ஆட்டக்காரர் என்ற பெருமையை ஆரோன் பின்ச் பெற்றார்.
உலகக் கோப்பை போட்டியில் தனது முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட் வீழ்த்திய 7-ஆவது பந்துவீச்சாளர் மிச்செல் மார்ஷ் ஆவார்.
இங்கிலாந்தின் ஸ்டீவன் ஃபின் இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் (ஹாடின், மேக்ஸ்வெல், ஜான்சன்) வீழ்த்தினார். உலகக் கோப்பை போட்டிகளில் இது 8-ஆவது ஹாட்ரிக் நிகழ்வாகும்.
 
ஸ்கோர் போர்டு
 
ஆஸ்திரேலியா   ரன்

வார்னர் (பி) பிராட் 22
பின்ச் (ரன் அவுட்) 135
வாட்சன் (சி) பட்லர் (பி) பிராட் 0
ஸ்மித் (பி) வோக்ஸ் 5
பெய்லி (பி) ஃபின் 55
மேக்ஸ்வெல் (சி) ரூட் (பி) ஃபின் 66
மிச்செல் மார்ஷ் (சி) ரூட் (பி) ஃபின் 23
ஹாடின் (சி) பிராட் (பி) ஃபின் 31
ஜான்சன் (சி) ஆன்டர்சன் (பி) ஃபின் 0
ஸ்டார்க் (நாட் அவுட்) 0
உதிரி 5
மொத்தம் (50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 342

விக்கெட் வீழ்ச்சி: 1-57 (வார்னர்), 2-57 (வாட்சன்), 3-70 (ஸ்மித்), 4-216 (பின்ச்), 5-228 (பெய்லி), 6-281 (மார்ஷ்), 7-342 (ஹாடின்), 8-342 (மேக்ஸ்வெல்), 9-342 (ஜான்சன்).

பந்து வீச்சு

ஆன்டர்சன் 10-0-67-0
பிராட் 10-0-66-2
வோக்ஸ் 10-0-65-1
ஃபின் 10-0-71-5
அலி 9-0-60-0
ரூட் 1-0-11-0


இங்கிலாந்து     ரன்

அலி (சி) பெய்லி (பி) ஸ்டார்க் 10
இயான் பெல் (சி) ஸ்டார்க் (பி) மார்ஷ் 36
பாலன்ஸ் (சி) பின்ச் (பி) மார்ஷ் 10
ரூட் (சி) ஹாடின் (பி) மார்ஷ் 5
மோர்கன் (சி) ஹாடின் (பி) மார்ஷ் 0
டெய்லர் (நாட் அவுட்) 98
பட்லர் (சி) ஸ்மித் (பி) மார்ஷ் 10
வோக்ஸ் (சி) ஸ்மித் (பி) ஜான்சன் 37
பிராட் (பி) ஸ்டார்க் 0
ஃபின் (சி) & (பி) ஜான்சன் 1
ஆன்டர்சன் (ரன் அவுட்) 8
உதிரி 16
மொத்தம் (41.5 ஓவர்களில்) 231


விக்கெட் வீழ்ச்சி :1-25 (அலி), 2-49 (பாலன்ஸ்), 3-66 (பெல்), 4-66 (ரூட்), 5-73 (மோர்கன்), 6-92 (பட்லர்), 7-184 (வோக்ஸ்), 8-194 (பிராட்), 9-195 (ஃபின்), 10-231 (ஆன்டர்சன்).

பந்து வீச்சு

ஸ்டார்க் 9-1-47-2
ஹேஸில்வுட் 6.5-0-45-0
ஜான்சன் 8-0-36-2
மிச்செல் மார்ஷ் 9-0-33-5
வாட்சன் 3-0-13-0
மேக்ஸ்வெல் 4-0-33-0
ஸ்மித் 2-0-19-0

ad

ad