புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015

கோஹ்லி, ரெய்னா மிரட்டலில் வரலாற்றை தக்க வைத்தது இந்தியா: மார்தட்டிய பாகிஸ்தான் மீண்டும் படுதோல்வி (வீடியோ இணைப்பு)



பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்தியா 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
அதன் படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். ரோஹித் சர்மா 2 பவுண்டரியும் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் தவானுடன், இந்திய துணை அணித்தலைவர் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியின் ஓட்டங்களை மொதுவாக உயர்த்தினர்.
தவான் 73 ஓட்டங்கள் எடுத்திருந்த போது சிறிய தவறால் ஓட்ட முறையில் வெளியேற்றப்பட்டார். அப்போது கோஹ்லி அரைசதம் கடந்திருந்தார்.
பிறகு கோஹ்லி, ரெய்னாவுடன் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணியின் ஓட்டங்களை மெதுவாக உயர்த்தினர். 2 விக்கெட் மட்டும் இழந்திருந்த நிலையில் இருவரும் பாகிஸ்தானின் பந்து வீச்சை எளிதாக சமாளித்தனர்.
40 ஓவர்களை தொட்ட போது ரெய்னா திடீரென்று விஸ்வரூபம் எடுத்தார். பாகிஸ்தானின் பந்து வீச்சை சிக்சரும், பவுண்டரியுமாய் பறக்க விட்டார். இதனால் அரைசதம் கடந்தார் ரெய்னா.
மறுமுனையில் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த கோஹ்லி பாகிஸ்தானுக்கு எதிராக 2வது முறையும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 22வது முறையுமாக சதம் அடித்தார்.
கோஹ்லியும் ரெய்னாவுடன் சேர்ந்து அதிரடி காட்ட இந்திய அணியின் ஓட்டங்கள் மளமளவென்று உயர்ந்தது. கோஹ்லி 107 ஓட்டங்கள் (8 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்க, ரெய்னா 74 ஓட்டங்கள் (5 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்த நிலையில் வெளியேறினார்.
அடுத்து அணித்தலைவர் டோனி (18), ஜடேஜா (3), ரஹானே (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை குவித்தது. அஸ்வின், ஷமி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில், சொஹாலி கான் 5 விக்கெட்டுகளையும், வஹாப் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் 301 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 224 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
இந்திய பந்து வீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் திணற ஆரம்பித்தனர். இதன் காரணமாக விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தது.
தொடக்க ஆட்டக்காரரான சீஹசட் 47 ஓட்டங்களும், சொஹாலி 36 ஓட்டங்களும், அப்ரிடி 22 ஓட்டங்களும், யாசிர் 13 ஓட்டங்களும் எடுத்தனர்.
கடைசி வரை தனி ஆளாக போராடிய அணித்தலைவர் மிஸ்பா 76 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில், சிறப்பாக பந்து வீசிய ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொகித் சர்மா, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மேலும்  1992, 1996, 1999, 2003, 2011 ஆகிய உலகக்கிண்ணத் தொடரை தொடர்ந்து தற்போது 6வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றையும் தக்க வைத்துள்ளது இந்தியா.


ad

ad