புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2015

வாகனங்களில் உள்ள ஐஎன்டி நம்பர் பிளேட்டுகளை உடனே அகற்ற உத்தரவு

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் என்ற பெயரில் வாகனங்களில் போலியாக பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை உடனே அகற்றும் படி சென்னை மாநாகர காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள வாகன உரிமையாளர்கள் போலி நம்பர் பிளட்டுகளுக்கு தலா 700 ரூபாய் முதல் 2000 ரூபாய் செலுத்த நேர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

 மோட்டார் வாகனங்கள் அனைத்திலும் ஐஎன்டி நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. போலியாக நம்பர் பிளேட் மாட்டிக்கொண்டு முறைகேடுகளிலும், குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதை தடுக்கவே இந்த உத்தரவை நடைமுறைபடுத்தி இருக்கிறது உச்சநீதிமன்றம் இதனை ஏற்று சில மாநிலங்களில் ஐஎன்டி நம்பர் பிளேட் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 

ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஐஎன்டி நம்பர் பிளேட் என கூறி சிலர் போலியாக நம்பர் பிளேட் விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு 700 ரூபாய் முதல் 2000 ரூபாய்  வரை வசூலித்தனர்.

 சிகப்பு மற்றும் நீல நிற கலரில் ஐஎன்டி நம்பர் பிளேட் விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் போது நல வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் ஐஎன்டி நம்பர் பிளேட் திட்டத்தை நடைமுறை படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் போலியாக ஐஎன்டி நம்பர் பிளேட் விற்பனை செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியது. 

இதையடுத்து தமிழகம் முழுவதும் ஐஎன்டி நம்பர் பிளேட் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் போக்குவரத்து போலீசார் தீவிரகாட்டி வருகின்றனர். சென்னையிலும் இன்று பல்வேறு இடங்களில் வாகன ஒட்டிகளிடம் ஐஎன்டி நம்பர் பிளேட் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர
 உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் என்ற பெயரில் வாகனங்களில் போலியாக பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை உடனே அகற்றும் படி சென்னை மாநாகர காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள வாகன உரிமையாளர்கள் போலி நம்பர் பிளட்டுகளுக்கு தலா 700 ரூபாய் முதல் 2000 ரூபாய் செலுத்த நேர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

 மோட்டார் வாகனங்கள் அனைத்திலும் ஐஎன்டி நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. போலியாக நம்பர் பிளேட் மாட்டிக்கொண்டு முறைகேடுகளிலும், குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதை தடுக்கவே இந்த உத்தரவை நடைமுறைபடுத்தி இருக்கிறது உச்சநீதிமன்றம் இதனை ஏற்று சில மாநிலங்களில் ஐஎன்டி நம்பர் பிளேட் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. 

ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஐஎன்டி நம்பர் பிளேட் என கூறி சிலர் போலியாக நம்பர் பிளேட் விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு 700 ரூபாய் முதல் 2000 ரூபாய்  வரை வசூலித்தனர்.

 சிகப்பு மற்றும் நீல நிற கலரில் ஐஎன்டி நம்பர் பிளேட் விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் போது நல வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் ஐஎன்டி நம்பர் பிளேட் திட்டத்தை நடைமுறை படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் போலியாக ஐஎன்டி நம்பர் பிளேட் விற்பனை செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியது. 

இதையடுத்து தமிழகம் முழுவதும் ஐஎன்டி நம்பர் பிளேட் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் போக்குவரத்து போலீசார் தீவிரகாட்டி வருகின்றனர். சென்னையிலும் இன்று பல்வேறு இடங்களில் வாகன ஒட்டிகளிடம் ஐஎன்டி நம்பர் பிளேட் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ad

ad