திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது பற்றி நடிகை லாக்கெட் சாட்டர்ஜி கூறுகையில், நான் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த போது மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று கூறிதான் இணைந்தேன். ஆனால், அங்கு எனக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை. வெற்றிடமாகவே இருந்ததாக உணர்ந்தேன். என்னால் அங்கு மக்கள் பணியாற்ற முடியவில்லை. ஆனால், பாரதீய ஜனதாவில் ஒவ்வொருவரும் மக்களுக்காக உழைப்பதை பார்த்தேன். எனக்கு ஏற்ற சரியான இடம் அதுதான் என எனக்கு தோன்றியதால் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறேன் என்றார்.