புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2015

குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்லத் தடை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தடையை விதித்துள்ளது.  குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு இது குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரன் பத்மநாதனின் கடவுச்சீட்டை முடக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஜே.வி.பி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
குமரன் பத்மநாதன் என்பவரை கைது செய்து அவர் செய்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யுமாறு கோரி ஜே.வி.பி கடந்த 19 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தது.
வழக்கில், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், இராணுவ தளபதி, கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சட்டதா அதிபர், குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர், குமரன் பத்மநாதன் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குமரன் பத்மநாதன் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை விநியோகித்து போரை முன்னெடுத்துச் செல்ல காரணமாக இருந்தவர் எனவும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர் எனவும் ஜே.வி.பியின் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad