புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2015

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்--முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த 26 வயதுடைய பெண் கடத்தப்பட்டுள்ளார்.


இலங்கயைின் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த 26 வயதுடைய பெண் கடத்தப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பை வதிவிடமாக கொண்ட விஸ்வலிங்கம் வினோதினி எனும் பெண் நேற்று காலை இனந்தெரியாத நபரினால் கடத்தப்பட்டுள்ளார் என த கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல்போன பெண் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நேற்று காலை முன்பள்ளிக்கு செல்லும் போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வரினால் கடத்தப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் குறித்த ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இந்த பெண்ணை இலங்கை பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்களே கடத்தி சென்றனர் என கண்ணில் கண்ட சாட்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வினோதினி கடந்த அரசாங்கத்தின் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் இயங்கும் முன்பள்ளி ஆசிரியராக செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் பூந்தோட்டம் தடுப்பு முகாமிலிருந்தே பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறியை கற்றுள்ளார்.
குறித்த பெண் யாழ் முன்னாள் இராணுவ கட்டளை தளபதி, மற்றும் வடமாகாண ஆளுனரினால் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ad

ad