12 மார்., 2015

சங்கக்காராவிடம் மண்டியிட்டு கேட்டுக்கொண்ட மேத்யூஸ்


இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா ஓய்வு பெறக்கூடாது என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சேலோ மேத்யூஸ் மண்டியிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
2015 உலகக்கிண்ண போட்டி முடிந்த பிறகு சங்கக்காரா ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர், விக்கெட் கீப்பர் என்ற பெயர்களுக்கு சொந்தக்காரர் சங்கக்காரா.
மேலும், கிரிக்கெட் ஆட்டத்தின் சிறந்த தூதர் சங்கக்காரா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியதாவது, நான் அவரிடம் மண்டியிட்டு கேட்டுக் கொள்கிறேன் ஓய்வு பெற வேண்டாம் என்று, ஆனாலும் அவரது ஆசையையும், முடிவையும் பெரிதும் மதிக்கிறேன். நாட்டுக்காக அவர் ஒவ்வொரு முறை சிறப்பாக ஆடியதற்கு அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது முடிவில் மாற்றமில்லை என்று கூறிய சங்கக்காரா, “ஓய்வு பெறுவது என்பது ஒருவரது ஃபார்ம் தொடர்பான விடயமல்ல. சரியான உணர்வு மற்றும் கால நேரமே ஓய்வை தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.