புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2015

வரலாறு படைத்தார் சங்கக்காரா


ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கையின் சங்கக்காரா தொடர்ச்சியாக 4 சதமடித்து வரலாற்று சாதனை படைத்தார்.
அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இலங்கை- ஸ்காட்லாந்து அணிகள் மோதும் உலகக் கிண்ண லீக் போட்டி நடைபெறுகின்றது.
இந்த போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷன் 104 ஓட்டங்களும், சங்கக்காரா 124 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக 4வது சதமடித்து வரலாறு படைத்தார் சங்கக்காரா.
தவிர இது, உலகக் கிண்ண அரங்கில் இவரது 5வது சதம். இதன்மூலம் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில், 2வது இடத்தை அவுஸ்திரேலியாவின் பொண்டிங்குடன் பகிர்ந்து கொண்டார்.
உலகக் கிண்ணப் போட்டியில் 4வது சதமடித்த தில்ஷன், 3வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
மேலும் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் 5 ஆட்டங்களில் இருந்து இதுவரை 496 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சங்கக்காரா முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தை மற்றொரு இலங்கை வீரர் தில்ஷன் 395 ஓட்டங்களுடனும், இந்திய வீரர் ஷிகர் தவான் 333 ஓட்டங்களுடனும் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ad

ad