புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2015

கிருஷ்ணசாமி, நீதிபதிகள் தரப்பு - ‘கொம்பன்’ படக்குழுவினர் வாய்த்தகராறு: நீடிக்கும் சிக்கல்




நடிகர்கள் ராஜ்கிரண் - கார்த்தி நடித்துள்ள கொம்பன் திரைப்படம் நாளை மறுதினம் திரைக்கு வருவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.   இந்நிலையில் அப்படம் திட்டமிட்டபடி திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் பாடல்களிலும், படத்தின் சில காட்சிகளிலும் வசனங்களிம் குறிப்பிட்ட ஒரு தரப்பினரை தவறாக சித்தரித்துள்ளதாகவும்,  இதனால் தென்மாவட்டங்களில் சாதிக்கலவரம் உருவாகும் என்றும் அதனால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  வழக்கு தொடுத்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன்,  ‘’ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர், கிருஷ்ணசாமி மேலும் 7 வழக்கறிஞர்களுக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் திரையிட்டுக்காட்ட வேண்டும்.  அவர்கள் சொல்லும் கருத்தை வைத்து படத்திற்கு அனுமதி கொடுக்கலாமா? தடை விதிப்பதா?  என்று முடிவுக்கு வரவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

அதன்படி, இன்று 10 பேரும் சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டருக்கு சென்றனர்.  அங்கே, தயாரிப்பாளர் தரப்பினருக்கும்,  கிருஷ்ணசாமி குழுவினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.  இதனால் குழுவினர் படத்தை பார்க்காமல் திரும்பியுள்ளனர்.

இன்று மாலை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜராகிறார் கிருஷ்ணசாமி. திட்டமிட்டபடி கொம்பன் வருமா என்பது மாலையில் தெரிந்துவிடும்.

ad

ad