புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2015

எத்தியோப்பியாவைப்போல தமிழகம் மாறிவிடும்: வைகோ



காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டப்பட்டால் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவைப்போல தமிழகம் மாறிவிடும் என அச்சம் தெரிவித்தார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. ஆயிரம் ஆண்டுகளாக காவிரி நீர்ப்பாசனத்தை அனுபவித்து வந்த தமிழக விவசாயிகளின் வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிட்டது. கர்நாடக அரசின் இதுபோன்ற செயல்பாடுகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ளது. கர்நாடகா முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா ஆகியோரது பேச்சுக்கள் உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையில் உள்ளன. இது தொடர்பாக தமிழக எம்பி-க்கள் பிரதமரைச்சந்தித்த போது, இது குறித்து கவனத்தில் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், கபினி, கிருஷ்ணா நதிகள் உள்பட 4 ஆறுகளை மறித்து தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கி விட்டன.  இதை, அரசியல் பிரச்சினையாகப்பார்க்காமல் மக்களின், விவசாயிகளின் பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்.

இப்பிரச்சினை தொடர்பாக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஊர்வலமாகச்சென்று லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்தோம். மத்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் மத்திய அரசு அலுவலகங்களை  முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டோம்.  ஏப்.17 -ல் தஞ்சையில் காவிரிப்பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.  

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாகவே தமிழகத்தை கர்நாடக அரசு பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், காவிரியில் குறுக்கே அணைகளைக் கட்டினால் வரும் காலங்களில் பஞ்சத்தால் உலகின் மிகத்துயரம் மிகுந்

ad

ad