புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2015

பிரான்ஸ் தாயும் மகளும் தொடர்ந்து தடுத்து வைப்பு



விடுதலைப்புலிகளின் ‘கடற்புலிகள்’ அணியில் இருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு பிரான்ஸ் பிரஜை கொழும்பில் கைது

 தமிழீழத்திலிருந்து திலீபன் on March 3rd, 2015 நன்றி மேகலா
France
நமது செய்தியாளர்: தமிழீழத்திலிருந்து திலீபன் March 3, 2015.
மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக இலங்கை சென்றுவிட்டு மீண்டும் பிரான்சிற்கு செல்வதற்கு விமானநிலையம் சென்ற தாயும் அவரது மகளும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க
பேராளியென தெரிவித்து இவர் கைதுசெய்யப்பட்டு உள்ளமை குறித்து மேலும் தெரியவருவதாவது.
பெப்ரவரி 2 ம் திகதி ஜெயகணேஸ் பகீரதி பிரான்சிலிருந்து இலங்கைக்கு சென்றுள்ளார். அவரது பெற்றோரை பார்ப்பதே அவர் இலங்கை சென்றதன் நோக்கம், அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரது தந்தையும் சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.

france--02

பெப்ரவரி 12 ம்திகதி கிளிநொச்சியிலுள்ள அவரது வீட்டிற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என கூறிக்கொண்டு இருவர் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் தன்னை விஜித பண்டார என அறிமுகப்படுத்தி உள்ளார்.பகீரதி அவ்வேளை அங்கில்லாததால் அவரது தந்தை அவர்களை மறுநாள் வரும்படி கேட்டுள்ளார். இதன் படி மறுநாள் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் அவரது கணவன் குறித்து விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அவர் அதன் போது தான் 2 ம்திகதி பிரான்ஸ் திரும்புவதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் திரும்பிவரவில்லை. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள பிரிவினர் என கூறிக்கொண்டு இருவர் அவரது வீட்டிற்கு சென்று பொதுவான விடயங்களை சேகரித்துள்ளனர்.
மார்ச் முதலாம் திகதி பகீரதி அவரது மகள் மற்றும் உறவினர்களுடன் விமானநிலையம் செல்ல தயாரான வேளை கொழும்பு குற்றப் புலானய்வு திணைக்கள அவலலகத்திற்கு வருமாறு அவரிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் தான் அன்று காலை பிரான்ஸ் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவர் மறுநாள் தனது உறவினர்களுடன் விமானநிலையம் புறப்பட்ட வேளை பயங்கரவாத தடுப்புபிரிவினர் அவரையும் மகளையும் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதரிகாலை 2.30 மணிமுதல் 8.30 வரை அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை மகளுடன் தடுத்து வைத்திருந்துள்ளனர். அவரது உறவினர்கள் இரு சிறு குழந்தைகளுடன் விமான நிலையத்திலேயே இருந்துள்ளனர் சுமார் 9.00 மணிக்கு இருவரையும் விடுதலை செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவர்களை தங்கள் கொழும்பிலுள்ள தங்கள் அலுவலகத்திற்கு செல்லுமாறு பணித்துள்ளனர். இதன் படி பகீரதி 10 மணியளவில் தனது உறவினர்களுடன் அந்த அலுவலகம் சென்றுள்ளார்.
அங்குள்ள கட்டிடத்திற்குள் பகீரதியையும் மகளையும் அதிகாரிகள் அழைத்துச்சென்றுள்ளனர்.பின்னர் கொழும்பு 12 இல் உள்ள நீதவான் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.பகீரதியின் குடும்பத்தவர்கள் தாங்கள் சட்டத்தரணி ஓருவரை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த போதிலும் அதனை அலட்சியம் செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அதனை அலட்சியம் செய்து அவரை நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் வெளியே வந்த பகீரதி தங்களை தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பகீரதியின் சகோதரரிடம் அவரிற்கான உடைகளை கொண்டு வருமாறு பணித்துள்ளனர்.சகோதரர் சட்டத்தரணி ஒருவருடன் அங்கு சென்றுள்ளார். சட்டத்தரணி பகீரதியை சந்திக்க அனுமதி கேட்ட வேளை பண்டார என்ற அதிகாரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.சட்டத்தரணிகள் தங்களது இயக்குநரின் அனுமதியை பெற்றே அவரை சந்திக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பகீரதியை தங்களால் நீதிமன்றத்தில் ஆஜராக்காமல் வைத்திருக்க முடியும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கடற்புலிகள் அமைப்பிலிருந்ததாகவும், பிரான்சில் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்ட முயன்றதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அதிகாரி பிரான்ஸ் பிரஜையும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளருமான பகீரதியின் கணவரை இலங்கை வரச்செய்வதற்காகவே அவரை குழந்தையுடன் தடுத்துவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அமைப்பிலிருந்த பகீரதி 2005 ம் ஆண்டு பிரான்ஸ் சென்றதாகவும், அவரது கணவர் அந்த அமைப்பின் தீவிர ஆதரவாளர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.2006 இல் பிறந்த அவரது மகள் ஒரு பிரான்ஸ் பிரஜை எனவும் அங்குள்ள பாடசாலையில் கல்வி கற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

ad

ad