புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2015

இணையப் பரப்புரையை நம்பி விட வேண்டாம் மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்


 எதிரியை தோற்கடிப்பது என்பதும், எதிரியை பழிவாங் குவது என்பதும் இரண்டு வௌ;வேறு விடயங்கள். ஒரு வரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள
வேண்டும். வரலாற்றுக் காலம் முதல் இலங்கையில் இந்த கலாசாரம் காணப்பட்டது. இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல கொட்டலுகொடகந்த சிறி கௌல்தராம விஹாரையின் ஸ்ரீ சுமன அறநெறிப் பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் நேற்றுமுன்தினம் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக நானும் எனது குடும்பத்தினரும் கடுமையான அவமானங்களை அவதூறு களை எதிர்நோக்க நேரிட்டது. இவற்றை தாங்கிக் கொள்ளும் சக்தி என்னிடம் உண்டு. மக்கள் ஆதரவு எனக்கு காணப்படுகின்றது. நான் எனது பொறுப் புக்களை புதிய அரசிடம் ஒப்படைத்த போது நான் செய்த பணிகளை முன்னெடுப்பார்கள் எனக் கருதியே வீட்டுக்கு சென்றேன்.என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டின் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிய காரணத்தால் மக்கள் என்னை நேசிக்கின்றார்கள். நாம் அனை வரும் பௌத்த மத வழிமுறைகளை பின்பற்றி னால் பௌத்த மதம் எம்மை பாதுகாக்கும். பௌத்த மத கொள்கைகளின் அடிப்படையில் நாம் பயங்கரவாதிகள் மீது குரோதம் கொள்ளாது அவர்களுக்கு கருணை காட்டி, புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் மீள இணைத்தோம்.
தொலைக்காட்சியில் அல் லது இணையத்தளங்களில் பரப்புரை செய்யப்படும் எல் லாவற்றையும் நம்பிவிட வேண்டாம். யார் எதனையா வது சொன்னால் அதனை ஆராய்ந்து பார்க்காது ஏற் றுக் கொள்ள வேண்டாம்.|| என்றும் அவர் தெரிவித்துள் ளார்.

ad

ad