புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் 19ம் திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது!– சிறிபால டி சில்வா
திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் 19ம் திருத்தச் சட்டத்தை ஆதரிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் 19ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
சில திருத்தங்களை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவு வழங்கப்படும் என்பது பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை பணி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும் மற்றும் அரசியல் அமைப்புச் சபையின் அங்கத்தினராக தொழில் நிபுணர்களுக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள்; நியமிக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள் உள்ளடங்கிய கடிதமொன்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் நேற்று தேசிய நிறைவேற்றுப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான திருத்தங்களை முன்வைக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவோ தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அமைச்சர் ராஜித சேனாரட்னவும் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் தெரிவித்துள்ளனர்.
19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad