புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

20 ஐ நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்

எந்தவொரு சிறுபான்மை கட்சிக்கும் பாதிப்பில்லை
தேர்தல் முறை மாற்றத்திற்கான திருத்தம் மூலம் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட எந்த சிறுபான்மை கட்சிகளுக்கும் பாதகம் ஏற்படாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுஸில் பிரேம ஜயந்த எம்.பி. தெரிவித்தார்.
இதற்கிணங்க 19வது திருத்தத்தைப் போன்றே 20 வது திருத்தத்தையும் நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரவளிப்பது அவசியம் என்றும்
கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்தவர்கள் மாநாடு ஜனாதிபதியின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றபோது அங்கு உரையாற்றிய சுஸில் பிரேம ஜயந்த எம். பி. மேலும் தெரிவிக்கையில், உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாமல் நிறை வேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையிலான திருத்தம் தற்போது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தொகுதிவாரியானதும் விருப்பு வாக்கு இல்லாதொழிப்பதுமான தேர்தல் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தார். அதற்கிணங்க அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பித்து அதற்கான நடவடிக்கையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதற்கிணங்க 19 வது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் மட்டுப்படுத்தப்படு கிறது. அதேபோன்று 20வது திருத்தத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் முறையும் நடைமுறைக்கு வரு கிறது. மீள 18வது திருத்தம் இல்லா தொழிக்கப்பட்டு 17வது திருத்தம் திருத்தங் களுடன் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுத் தப்படவுள்ளன.
சுயாதீன அரச சேவை, சுயாதீன பொலிஸ் சேவை உட்பட பத்து சுயாதீன ஆணைக் குழுக்கள் செயற்படுத்தப் படவுள்ளன. இதன் மூலம் நாட்டு மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமை பாதுகாக்கப்படும் நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.
1978 லிருந்து இன்று வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க முதல் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறை வேற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என் பதைக் குறிப்பிடவேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 62 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு 58 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. இவையிரண்டும் சேர்ந்தால் 120 இலட்சமாகும். 150 இலட்சம் வாக்காளர்களே உள்ளனர். 210 இலட் சம் பேர் இந்த நாட்டில் வாழும் மக்களாவர்.
பாராளுமன்றத்தில் இப்போது 225 உறுப்பினர்கள் உள்ளனர். 136 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களாவர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 120ற்கு மேற்பட்டோர் உள்ளனர்.
மேற்படி சட்டமூலங்கள் நிறைவேற 150 உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டியது அவசியம்.
100 நாள் 1001 நாள் என்று நாம் நாட்களை மட்டுப்படுத்த முடியாது. எனினும் விடயம் நடைபெறவேண்டியதே முக்கியம். இது இந்த நாட்டின் சட் டத்தின் வடிவம். இது திருத்தப்படும்போது அனைத்தையும் கவனத்திற் கொண்டே தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அதற்கான பின்னணிகள் உருவாக்கப்பட் டுள்ளன.
இதற்கிணங்க ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கிணங்க தேர்தல் முறை மாற்றம் நடைமுறைப்படுத் தப்படவேண்டும்.
இது தற்போதுள்ள கட்சிகளின் ஆசனங் களுக்கு சமனான ஆசனங்களை பெற்றுக் கொடுக்கும் என்பது உறுதி. ஏனெனில் 1988 களில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப் பட்டபோது 75 இலட்சம் வாக்காளர்களே இருந்துள்ளனர். தற்போது அது 150 இலட் சமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் எவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் நீதியான முறையிலேயே தேர்தல் முறை மாற்ற திருத்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை சகலரும் உணர வேண்டும். இது 2003ல் நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்தன குழுவின் பரிந்துரை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது.
அன்று 17வது திருத்தம் பாராளுமன்றத்தில் 225 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட் டது. தற்போது பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 124 பேரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 136 பேரும் ஐ. தே. கவில் 49 பேரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 14 பேரும் ஜே. வி. பி. யில் ஆறு பேரும் உள்ளனர். அன்று போன்று மீண்டும் நாம் செயற்படக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad