புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

பூநகரிக்கான உள்ளூர் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பித்துவைக்கப் பட்டுள்ளது

.
பூநகரி வாடியடிச்சந்தியிலிருந்து பூநகரியின் ஏனைய கிராமங்களுக்குச் செல்வதற்கான பயனிகள் பேரூந்து வசதியை ஏற்படுத்தித் தருமாறு அந்தப்பகுதி மக்கள் நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர் இதற்கு அமைவாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் இன்று அந்தப்பகுதிக்கு இலங்கை போக்கு வரத்துசபையின் பேரூந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பூநகரியின் அயல் கிராமங்களிலிருந்து வாடியடிச்சந்திக்கு வரும் மக்கள் இது வரை நாளும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அத்துடன் பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்குச் செல்வதில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர் மக்களின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு இந்தப் பேரூந்து சேவையினூடாக தீர்வு கிடைத்திருப்பதாக பூநகரி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். தமது வீதிகளினூடாக இன்று முதல் தடவையாக பேரூந்து சென்றபோது வீதிகளில் கூடி நின்ற மக்கள் பேரூந்துக்கு மலர்மாலை அணிவித்து தமது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்
இந்தப் பேரூந்து சேவையானது நாள்தோறும் கலை வாடியடிச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி பூநகரி பரந்தன்வீதியூடாக நல்லூர்,ஆலங்கேணி,சின்னப்பல்லவராயன்கட்டு,முட்கொம்பன்,அரசபுரம்,பள்ளிக்குடா,செட்டிக்குறிச்சி ஊடாக மீண்டும் வாடியடிச்சந்திக்கு பேரூந்து வந்து சேரும் இ்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பூநகரியின் அயல் கிராமங்களிலிருந்து வாடியடிச்சந்திக்கு வரும் மக்கள் இது வரை நாளும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அத்துடன் பாடசாலை மாணவர்களும் பாடசாலைக்குச் செல்வதில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர் மக்களின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு இந்தப் பேரூந்து சேவையினூடாக தீர்வு கிடைத்திருப்பதாக பூநகரி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். தமது வீதிகளினூடாக இன்று முதல் தடவையாக பேரூந்து சென்றபோது வீதிகளில் கூடி நின்ற மக்கள் பேரூந்துக்கு மலர்மாலை அணிவித்து தமது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்
இந்தப் பேரூந்து சேவையானது நாள்தோறும் கலை வாடியடிச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி பூநகரி பரந்தன்வீதியூடாக நல்லூர்,ஆலங்கேணி,சின்னப்பல்லவராயன்கட்டு,முட்கொம்பன்,அரசபுரம்,பள்ளிக்குடா,செட்டிக்குறிச்சி ஊடாக மீண்டும் வாடியடிச்சந்திக்கு பேரூந்து வந்து சேரும் இவ்வாறு குறித்த வீதிகளினூடாக நாள்தோறும் சேவை இடம் பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் குறிப்பிட்டார்.
இன்றைய இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், இலங்கைப் போக்கு வரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர்,மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அதிகாரிகள்,பணியாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ad

ad