புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2015

ஏழு உப பிரிவுகள் நீக்கப்பட்டு சபையில் நிறைவேற்றப்படும்
 

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்ற 7 உப பிரிவுகளையும் நீக்கி விட்டு 1
9 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். 19 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்ற வியாக்கியானத்தை சபாநாயகர் அறிவித்ததை யடுத்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அவர் மேலும் கூறியதாவது,
தற்பொழுது உள்ள ஜனாதி பதியின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரே ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிரதமருக்கு வழங்கப்படும். அரசியலமைப்பு திருத்தம் அமுலுக்கும் வரும். அந்தத் திருத்தத்திற்கே சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குழுநிலை விவாதத்தின்போது தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். கடந்த காலங்களில் குழுநிலை விவாதத்தின்போது அரசிலயமைப்பு திருத்தத்திற்கு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன் முழு உள்ளடக்கத்தை கூட இதன்போது மாற்ற முடியும். மேலதிக திருத்தங்கள் மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து முன்வைக்க கால அவகாசம் கோரியிருக்கலாம். புதிய திருத்தங்களின் படி ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு கட்டுப்படுகிறார்.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கோரும் பிரிவுகளை நாம் முன்னெடுக்கப்போவ தில்லை. 18 ஆவது திருத்தம் ஒரே இரவில் அமுல்படுத்தப்பட்டது. பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுவதை எதிர்க்கிaர்களா? என பிரதமர் கேள்வி எழுப்பினார்.

ad

ad