புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2015

கிரானைட் மோசடி: ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்த பொறியாளர் விபத்தில் சிக்கினார்: சகாயம் அதிர்ச்சி



மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் மோசடிகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு
ஆய்வு நடத்தி வருகிறது. கிரானைட் பகுதிகளை ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்ய பார்த்தசாரதி என்ற பொறியாளரை நியமித்திருந்தார் சகாயம். 

பார்த்தசாரதி வழக்கம்போல தனது பணியில் ஈடுபட இன்று (வெள்ளி) காலை சென்றபோது, விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்து குறித்து அறிந்த சகாயம், தனது பணிகளை ஒத்திவைத்துவிட்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்தசாரதி குறித்து விசாரித்தார். கிரானைட் முறைகேடு! ஆளில்லாத குட்டி விமானம் மூலம் படமெடுத்தவர் விபத்தில் பலி! சகாயம் அதிர்ச்சி!

கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவுக்கு படம் எடுத்து கொடுத்த பார்த்தசாரதி என்பவர் வெள்ளிக்கிழமை காலை சாலை விபத்தில் பலியான சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு, மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. மலை மற்றும் கரடு முரடான பாதைக்கு சகாயம் நேரடியாகவே சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.

ஆட்கள் சென்று பார்க்க முடியாத இடங்களுக்கு ஆளில்லாத குட்டி விமானங்களை கொண்டு ஆய்வு நடத்தினார் சகாயம். இந்த குட்டி விமானங்களை இயக்கியவர் பார்த்தசாரதி. 

இவர், சகாயம் குழுவினர் கேட்டுக் கொண்டதின் பேரில் ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு ஆளில்லாத குட்டி விமானங்களை அனுப்பி படங்கள் எடுத்தார். எடுத்த அனைத்து படங்களையும் சகாயம் குழுவிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நண்பர் ஒருவரை விட்டுவிட்டு, காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபார்த்தசாரதி, சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேகத்தடையை தாண்டி 20 மீட்டர் தூரத்தில் பார்த்தசாரதி கார் மரத்தில் மோதியதுதான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சகாயம், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். சகாயம் குழுவுக்கு கிரானைட் முறைகேடு தொடர்பாக படம் எடுத்து கொடுத்தவர் சாலை விபத்தில் பலியான சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ad

ad