புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2015

கென்யாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 70 மாணவர்கள் பலி




கென்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த தீவிரவாதிகள், மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து கண்மூடித்தனமாக சுட்டதில் 70 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கென்யாவின் வடகிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது கரிஸா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளே முகமூடி அணிந்த தீவிரவாதிகள்  துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். இதையறிந்ததும் பாதுகாப்பு படையினர் பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி வளைத்தனர். 

உடனே அந்த தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டு போலீசாரை மிரட்டினர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்நது. ஒரு கட்டத்தில் மர்ம மனிதர்கள் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 70 மாணவர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad