புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2015

வடக்கிலுள்ள அரச காணிகளை மாகாண சபையின் அனுமதியுடன் கையளியுங்கள்


வடக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளை தனியாருக்கோ அல்லது வேறு அமைப்புகளுக்கோ வழங்கும்போது அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய வடக்கு
மாகாண சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என மத்திய காணி ஆணையாளரைப் பணிக்குமாறு கோரி வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
 
இதன் பிரதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கைப்பட்டுள்ளதாவது:- 
 
வடக்கு மாகாண சபையின் 2014.10.09ஆம் திகதிய அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், இந்திய - இலங்கை உடன்படிக்கை, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் முன்மொழிவுகள் மற்றும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் 154 பு1 பிரிவின் படி, அரச காணி மாகாணத்துக்கு உரித்தான விடயம் என்பதையும் சுட்டிக்காட்டியே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 
 
இவ்வாறு பணிப்புரை விடுத்தல் நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் பிரதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்பிவைக்ப்பட்டு அடுத்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தைப் பிரஸ்தாபிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ad

ad