புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2015

கல்லூரி மாணவர்கள் 18 ஆயிரம் பேருக்கு இலவச டிக்ஸனரி!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்கள் 18 ஆயிரம் பேருக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் டிக்ஸனரி வழங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த
நாளையொட்டியும், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி அவர் மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் கோவில்களில் அன்னதானம் செய்வது, சிறப்பு வழிப்பாடு நடத்துவது என கலக்கி வருகின்றனர்.

இதேபோல், சாத்தூர் தொகுதி எம்.எல்,ஏ.வும், வருவாய்த்துறை அமைச்சரான ஆர்.பி. உதயக்குமாரும், தாடி வளர்த்துக்கொண்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வது, திருவிளக்கு பூஜைகள் நடத்துவது, தங்கத்தேர் இழுப்பது என்று தன் பங்கிற்கும் விசுவாசத்தை காட்டி வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்காக பூஜைகள் நடத்திய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், சாத்தூர் தொகுதியில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த 18 ஆயிரம் மாணவர்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் போட்ட ‘டிக்ஸனரியை’ இலவசமாக வழங்கினார்.

ad

ad