புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2015

புதிய கிரகத்திற்கு தமிழன் “விஸ்வநாதன் ஆனந்த்” பெயர் சூட்டப்பட்டுள்ளது

முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் பெயர்ஒரு குட்டிக் கிரகத்திற்குச் சூட்டப்பட்டுள்ளதுகிரகங்கள்
ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உள்ளது.
தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்படும் கிரகங்களுக்கு பிரபலங்களின் பெயர் சூட்டப்படுவது வழக்கமாகியுள்ளது.
ஏற்கனவே பிராட்மேன்ரோஜர் பெடரர்ஜெஸ்ஸி ஓவன் என சில பிரபலங்களின் பெயர்கள் குட்டி கிரகங்களுக்கு சூட்டப்பட்டுள்ளதுஅந்த வரிசையில் தற்போது இன்னொரு புதிய கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1988-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி ஜப்பானை சேர்ந்த கென்சோ சுசுகி என்பவரால் இந்த கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.இந்த கிரகம் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் உள்ளது.
இதுவரை எண்களை வைத்து மட்டும் அழைக்கப்பட்டு வந்த அந்த கிரகத்திற்கு இப்போது விஷியானந்த் 4538 என பெயரிட்டுள்ளனர்சர்வதேச வட்டாரத்தில் விஷி ஆனந்த் என்றுதான் செல்லமாக அழைக்கப்படும் ஆனந்த்அதே பெயரையே தற்போது சூட்டியுள்ளனர்இந்த செய்தி குறித்து ஆனந்த் வியப்பு தெரிவித்துள்ளார்தன்னை கலாய்க்கிறார்களோ என்று முதலில் நினைத்ததாக சிரித்தபடி கூறியுள்ளார் ஆனந்த்ஐந்து முறை செஸ் உலக சாம்பியனாக திகழ்ந்தவர் ஆனந்த்இவரது பெயரை இக்கிரகத்திற்கு வைக்கலாம் என்று பரிந்துரைத்தவர் சிறு கிரக மையங்களின் தலைவரான மைக்கேல் ருடென்கோதான்இவர் ஒரு செஸ் பிரியரும் ஆவார்.

ad

ad