புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2015

சவூதி வான் தாக்குதலுக்கு மத்தியிலும் யெமனில் 'pயா கிளர்ச்சியாளர் முன்னேற்றம்



சவ+தி அரேபியா தலைமையிலான கூட்டணி கடந்த ஒரு வாரமாக வான் தாக்குதல் நடத்திவரும் நிலையிலும் 'pயா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் தெற்கு யெமனின் பிரதான நகரான அதெனின் முக்கிய பகுதியை நோக்கி டாங்கிகளுடன் முன்னேறியுள்ளனர்.
சர்வதேச ஆதரவு பெற்றிருக்கும் யெமன் ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹதியின் விசுவாசம் கொண்ட ஆயுததாரிகள் மற்றும்
உள்ளுர் போராளிகளுக்கும் கிளர்ச்சியாளர் களுக்கும் இடையில் அதென் நகரில் புதன்கிழமை இடம்பெற்ற மோதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதென் நகரின் மையப்பகுதியையும் அந்த நகரின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் கொர் மஸ்கார் மாவட்டத்தில் ரொக்கெட் ஏவு கருவிகள், நான்கு டாங்கிகள் மற்றும் மூன்று கவசவாகனங்களுடன் கிளர்ச்சியாளர்கள் இருப் பதை கணக்கிடைப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இருந்து பெரும்பாலான மக்கள் வெளியேறி இருப்பதோடு மேலும் சிலர் நகரை விட்டு வெளியேற முயற்சித்து வருகின் றனர். கடந்த ஐந்து நாட்களாக தொடரும் மோதல்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 122 ஐ தாண்டியுள்ளது.
நகரின் பிரதான மருத்துவமனைக்கு கொல் லப்பட்ட ஆறு பொதுமக்களின் உடல்களும் உள்ளுர் போராளிகள் ஐவரின் சடலங்களும் வந்ததாக அந்த மருத்துவமனை வட்டாரம் நேற்று குறிப்பிட்டுள்ளது. இந்த மோதலில் தமது தரப்பில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக ஹவ்திக்கள் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளனர்.
அதெனை கைப்பற்றும் ஹவ்தி கிளர்ச்சி யாளர்களின் முயற்சிக்கு யெமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சலாஹ்வுக்கு விசுவாசமான இராணுவ பிரிவு உதவி வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன் யெமன் தலைநகரை கைப்பற்றியதன் பின்னர் அங்கு பலம்மிக்க ஆயுதக் குழுவாக ஹவ்திக்கள் மாறியுள்ளனர். யெமனின் பெரும்பகுதி ஹவ்திக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானோர் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஹவ்திக்களின் முன்னேற்றம் குறித்து யெமன் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை விடுத் துள்ளார். "அதென் ஹவ்திக்களிடம் வீழ்ந்தால் அங்குள்ள மக்கள் பெரும் பேரழிவை சந்திக்க வேண்டி வரும்" என்று ஹதி அரசின் வெளியுறவு அமைச்சர் ரியாத் யாசின் குறிப்பிட்டுள்ளார்.
ஹவ்திக்கள் முன்னேறி வரும் நிலையில் அந்த கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது சவ+தி கூட்டணி ஏழாவது நாளாகவும் புதன் இரவிலும் வான் தாக்குதல்களை நடத்தியது. இதில் கரையோர நகரான அதென் மற்றும் தலைநகர் சனாவிலும் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதன்போது ஹவ்திக்கள் அதென் நகரில் முன்னேறுவதை தடுக்க சவ+தி கூட்டணி கடல் மார்க்கமாகவும் கிளர்ச்சியாளர் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது சவ+தி அரேபியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி ஹதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் யெமனின் கடைசி பிரதான நகர் அதென் என்பது குறிப்பிடத் தக்கது.
அதென் நகரை விட்டு கடந்த வாரம் வெளியேறிய ஹதியை மீண்டும் யெமனில் ஆட்சியில் அமர்த்துவதற்கே சவ+தி அரேபியா போராடி வருகிறது. சவ+தி அரேபியாவுடன் 10க்கும் அதிக சுன்னி முஸ்லிம் நாடுகள் யெமன் மீதான படை நடவடிக்கையில் பங்கேற்றுள்ளது. 'pயா ஹவ்திக் கிளர்ச்சியாளர்களுக்கு பிராந்தியத்தின் 'pயா பெரும்பான்மை நாடான ஈரான் ஆதரவு அளிப்பதாக இந்த கூட்டணி குற்றஞ்சாட்டுகிறது.
கிளர்ச்சியாளர் இலக்குகளை தாக்குவது கடினமாக இருப்பதாக சவ+தி கூட்டணியின் பேச்சாளர் nஜனரல் அஹமது அஸி குறிப்பிட் டுள்ளார். அனைத்து உளவு வழிகளையும் பயன்படுத்தி தாம் தவறான இலக்கை தாக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே தாக்குதலை நடத்துவதாக குறிப்பிட்ட அவர், ஹவ்திக்கள் அற்றது சலாஹ் ஆதரவு துருப்பினர் இல்லாத இடத்தை நாம் இலக்கு வைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹவ்திக்கள் தலைநகர் சனாவை கைப்பற் றியதை அடுத்தே ஜனாதிபதி ஹதி, அதென் நகரில் தஞ்சமடைந்து அதனை தலைநகராகக் கொண்டு இயங்கி வந்தார். செங்கடல் துறைமுக நகரான ஹ{தைதாவில் சவ+தி கூட்டணி கடந்த புதன்கிழமை நடத்திய வான் தாக்குதலில் 25 பால் பண்ணை தொழி லாளர்கள் கொல்லப்பட்டனர்.
 

யெமனில் வெளிநாட்டு தரைவழிப் படை நுழைந்தது

யெமனின் அதென் நகருக்கு நேற்று வெளிநாட்டு படையினர் தரையிறங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்த நாட்டுப் படையினர் அங்கு தரையிறங்கி இருப்பது என்பது உறுதியாகவில்லை என்று சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
சவ+தி அரேபிய ஆதரவு யெமன் ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி நகராக தெற்கு துறைமுக நகர் அதென் காணப்படுகிறது. எனினும் இந்த நகரில் ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.

யெமனில் அல் கொய்தாவால் சிறை தகர்ப்பு: 300 கைதிகள் தப்பியோட்டம்

தெற்கு யெமனில் சிறைச்சாலையை தாக்கிய அல் கொய்தா போராளிகள் அங்கிருந்த நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்துள்ளனர். இதில் அல் கொய்தாவின் முன்னணி தலைவர் ஒருவரும் அடங்குவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிரேஷ் அல் கொய்தா உறுப்பினர் காலித் பதர்பி உட்பட 300க்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். ஹட்ரமவுட் மாகாணத்தில் இருக்கும் சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் இரு சிறை காவலர்கள் ஐந்து கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பதர்பி அரேபிய தீபகற்பத்திற்கான அல் கொய்தா அமைப்பின் பிரதான தலைவர்களில் ஒருவராவார். கடந்த 2011, 2012 ஆம் ஆண்டுகளில் யெமன் அரசுடனான யுத்தத்தின்போது நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அல் கொய்தாவினர் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பதில் பதர்பி முக்கிய பங்கு வகித்துள்ளார். யெமனில் சவ+தி கூட்டணி ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தீவிர வான் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

ad

ad