புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2015

எனக்கும் குடும்பத்திற்கு எதிராகவும் ஆதாரமற்ற சூனிய வேட்டை


தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் எதுவித சாட்சியங்களுமின்றி
சூனியவேட்டை நடத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏ.எப்.பி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க எம்.பிக்கு அமைச்சுப் பதவி வழங்கியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “அவர்களிடம் எந்த சாட்சியங்களும் இல்லை. பாரியளவு குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். இது சூனியவேட்டையைப் போன்றது” என கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து வழங்கிய செவ்வியில் கூறியிருப்பதாக ஏ.எப்.பி குறிப்பிட்டுள்ளது.
“நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ சட்டவிரோதமாகப் பணம் எதனையும் பெறவில்லை. எனக்கு சுவிட்சர்லாந்தில் பெருமளவு பணம் இருப்பதாக முதலில் கூறினார்கள். இதன் பின்னர் டுபாயில் இருப்பதாகக் கூறினார்கள். எமக்கு அந்தப் பணத் தைக் காண்பியுங்கள். இதற்கான சாட்சியங்கள் எங்கே” என அவர் கேள்வியெழுப்பினார். “டுபாயில் எனக்கு ஹோட்டல் இருப்ப தாக அவர்கள் கூறினார்கள். இலங்கை யிலுள்ள அனைத்து ஹோட்டல்களுடைய உரிமை எனக்கும் எனது சகோதரர்களுக்கு மானது” எனக் கூறினார்கள்.
“இவை நகைச்சுவையானவை” என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீனாவுக்கு ஆதரவாகத் தான் நடந்து கொள்ளவில்லையென்றும் இலங்கையின் நன்மைகருதியே செயற்பட்டதாகவும் தெரிவித்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, பாரிய திட்டங்கள் பலவற்றை முதலில் இந்தியாவுக்கே வழங்கியிருந்தபோதும் அவை பெரிதாகப் பேசப்படவில்லை யென்றும் கூறியுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னரே தேர்தலை நடத்தியமை தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இது நான் இழைத்த பாரியதவறு வருந்துகிறேன்”, தேர்தலுக்குக் குறிக்கப்பட்ட நாள் சிறந்தது என தனது சோதிடர் கூறியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். “நான் தற்பொழுது ஜோதிடத்தில் நம்பிக்கை இழந்துவிட்டேன்” என புன்னகையுடன் கூறியுள்ளார்.
தனது அமைச்சர்கள் ஊழல் மோசடியிலும் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். “எனது அமைச்சர்கள் தவறுகள் செய்தபோதும் அவற்றைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டேன். முன்னர் நான் பாதுகாத்த அதேநபர்கள் தற்பொழுது என்னையும் எனது குடும்பத்தினரையும் துரத்துகின்றனர்” என்றும் முன்னாள் ஜனாதிபதி ஏ.எப்.பிக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித் துள்ளார்.
தான் அரசியலிலிருந்து ஓய்வுபெற்று விடவில்லையெனக் குறிப்பிட்டிருக்கும் அவர், புதிய அரசாங்கத்தில் பாரிய அரசியல் ஸ்திரமற்றதன்மை காணப்படு வதாகவும், ஸ்திரத்தன்மையை உறுதிப் படுத்த விரைவில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ad

ad