புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2015

செம்மரக் கடத்தலில் தமிழ் நடிகர் கைது! ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. பேட்டி!



ஆந்திராவில் செம்மர கட்டைகளை கடத்தியதாக தமிழ் திரைப்பட  நடிகர் உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குடிபாலா போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். போலீசார் காரை சோதனை செய்து கொண்டிருந்தபோது, காரில் இருந்த 6 பேர் தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசார் அவர்களை துரத்திச்  சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் வந்த காரில் 11 செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் காரையும், செம்மரக்  கட்டைகளையும் பறிமுதல் செய்து, சித்தூர் வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன், சுரேஷ், ஆனந்த், அரி உள்பட 5 பேரைக் கைது செய்தனர். காரை ஓட்டி வந்த சந்திரா என்பவரைத் தேடி வருகிறார்கள்.

கைதான சரவணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், அவரது தந்தை சந்திரன் தயாரிப்பில் ‘மன்னவரு’ என்ற தமிழ்ப் படத்தில் சரவணன் நடித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. ஆனால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இதனையடுத்து சென்னையில் உள்ள நடிகர் சரவணனின் 2 குடோன்களில் ஆந்திர போலீசார் தீவிர சோதனை செய்தனர். அங்கிருந்து 165 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபற்றி ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ராமுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

செம்மரக்  கட்டைகள் கடத்தியதாகத்  தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு படத்தில் நடித்துள்ளதோடு, தனது பினாமிகள் மூலமாகப்  பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களைத்  தயாரிக்க நிதி உதவி செய்துள்ளார்.

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் பலருடன் இவருக்கு தொடர்பு உள்ளது. அவர்களுக்கு தனது சொந்த செலவில் ஆடம்பர பங்களாக்களையும், விலை உயர்ந்த கார்களையும் பரிசளித்து உள்ளதாக விசாரணையில்  தெரியவந்துள்ளது.

சரவணனின் வங்கிக் கணக்கு மூலமாக யாருக்கெல்லாம் பணப்  பரிமாற்றம் நடந்துள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில் பல முக்கிய புள்ளிகள், சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது. செம்மர கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களில் பலர் சென்னையை மையமாக வைத்து தொழில் செய்து வந்துள்ளார்கள். சரவணனின் சகோதரர் லெட்சுமணன் என்பவரும் ஒரு படத்தில் தயாரிப்பாளராக இருந்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

ad

ad