புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2015

அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வது சாதாரணம்: மகிந்த


அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வது சாதராண விடயம் நான் மூன்று மாத சிறைவாசம் அனுபவித்தவன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
 
அரசியல்வாதிகள் சிறைச்சாலை செல்வதை பாரதூரமான விடயமாக கருதக்கூடாதுஇ அது அவர்களை பொறுத்தவரை சாதராணமான அனுபவம்
 
நானும் மூன்று மாத சிறைத்தண்டனையை அனுபவித்து உள்ளேன்.
 
பௌத்த  மதத்தை சேர்ந்தவன் என்ற வகையில் நான் வேறு எந்த மதத்திற்கு எதிராகவும் பாகுபாட்டை காட்டவில்லை.வெறுப்புணர்வு அரசியலிலும் நான் ஈடுபடவில்லை.
 
ஆனால் நல்லாட்சி அரசு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறாமலே பசில் ராஜபக்சவை சிறைச்சாலைக்கு அனுப்ப முயல்கின்றது.
 
கடந்த 100 நாட்களில் எங்களால் குற்றச்சாட்டுகளை தவிரவேறு எதனையும் கேட்கமுடியவில்லை.
 
நல்லாட்சி அரசின் பசில் கைது செய்யப்பட்டார், முக்கிய அதிகாரிகள் பலர் விசாரிக்கப்பட்டனர்.
 
பசில் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கை வரவிரும்புவதாக தெரிவித்தவேளை  நான் கூறினேன் இங்கு வந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம் என்றேன். ஆனால் அதற்கு அவர் தான் அப்பாவி தவறு எதனையும் செய்யவில்லை என்றார்.
 
பௌத்த மத ஆடைகளை வழங்குவது கூட ஓரு குற்றமாகிவிட்டது,எதிர்காலத்தில் சில் அனுஸ்டானங்களும் குற்றமாகலாம்.
 
இலஞ்ச ஊழல் திணைக்கள ஆணையாளருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் உள்ளன.அவர் சட்டவிரோதமாக காணிகளை வாங்கியுள்ளார்,அவர் இரண்டு இடத்தில் ஊதியம் பெற்றுள்ளதுடன் தனது சொத்துக்களையும் பிரகடனம் செய்யவில்லை.எனது ஆட்சிக்காலத்தில் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது பெரும் தவறு என அவர் தெரிவித்துள்ளார்

ad

ad